குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து தவறான தகவல்- நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலசுப்பிரமணியன் கைது
சென்னை: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீஸ் வார்னிங்
இந்த விபத்து குறித்து பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தவறான தகவல்கள், வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ரு போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

மாரிதாஸ் கைது
இந்நிலையில் குன்னூர் விபத்து குறித்து பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் என்பவர், திக, திமுக ஆதரவாளர்கள் பலரும் இராணுவ தளபதி விபத்தில் மரணத்தைக் கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக எமோஜி போடுவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் மாரிதாஸ் மீது கொடுக்கப்பட்ட போர்ஜரி இ மெயில் வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாயலாம் எனவும் கூறப்படுகிறது.

குமரி ஷிபின் கைது
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை ஷிபின் என்ற இளைஞர், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து தவறான தகவல்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் தமது பதிவில் கோவை குண்டு வெடிப்பு, ராஜீவ் படுகொலை, ஹெலிகாப்டர் விபத்து உள்ளிட்ட பல்வேறு கொலை சம்பவங்கள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யபப்ட்டார்.
Recommended Video

நாம் தம்ழிஅர் கட்சி பாலசுப்பிரமணியன்
தற்போது நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலசுப்பிரமணியன், குன்னூர் விபத்து குறித்து தமது வலைதளப் பக்கங்களில் தவறாக பதிவிட்டிருப்பதாகவும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பதிவுகள் போட்டிருப்பதாகவும் பாஜக நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications