தேள் கடிச்சா கையை தண்ணீரில்... விஷத்தை முறிக்க 'அண்ணன்' சீமான் சொல்லும் வழி இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷ முறிவுகளுக்காக தண்ணீருக்குள் இறங்க வேண்டும்; தண்ணீரில் உடல் பாகங்களை நனைக்க வேண்டும் என்கிற மருத்துவமுறை விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேள்கடித்தால் என்ன செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்சந்தர் மாவட்டத்தில் பாம்பு கடித்த இளைஞர் ஒருவரை பாம்பு கடித்தது. கடந்த ஏப்ரல் 20-ந் தேதி வாக்களித்துவிட்டு வயல்வெளிக்கு சென்ற போது பாம்பு கடித்தது.

Naam Tamilar Seeman advices handling Scorpion Sting


பாம்பு கடிக்குள்ளான இளைஞரை உடனே மருத்துவமனையில் சேர்க்கவில்லை. அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர், பாம்பு கடித்த இளைஞரை அப்படியே கங்கை நதி நீரில் மிதக்கவிட்டால் பாம்பு கடித்த விஷம் அப்படியே இறங்கிவிடும் என ஆலோசனை சொல்லி இருக்கின்றனர். இதனால் அந்த இளைஞர் உடலை கயிற்றில் கட்டி கங்கை நதிநீரில் மிதக்கவும் விட்டிருக்கின்றனர். ஆனாலும் பாம்பு கடிக்குள்ளான இளைஞரிடம் இருந்து எந்த அசைவும் வரவில்லை. பின்னர்தான் தெரியவந்து, பாம்பு கடித்த இளைஞர் இறந்து போனார் என்பதே. பின்னர் கங்கை நதி நீரில் மிதக்கவிட்ட இளைஞர் உடலை வெளியே எடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக உ.பி. போலீசார் விசாரணையும் நடத்தினர். கிராம மக்களின் மருத்துவம் என ஒருதரப்பும் இன்னொரு தரப்பு மூடநம்பிக்கை இது எனவும் விமர்சித்து வருகிறது.

இந்த பின்னணியில் சென்னை திரைப்பட விழா ஒன்றில் பேசிய சீமான், தேள் கடி விஷத்தை முறிக்க என்ன செய்ய வேண்டும் என பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிவிட்டது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: நாங்க எருமை மாடு மேய்க்கும் போது காடுகளுக்கு இடையில் படுப்போம்.. அப்ப தேள் கொட்டிவிடும். தேள் அப்படியே ஊர்ந்து ஊர்ந்து கடித்துவிடும். நானே அனுபவிச்சதை சொல்றேன் பாருங்க.. தேள் கொட்டிடுச்சுன்ன உடனே விஷம் ஏற ஆரம்பிக்கும். ஆனால் யாரிடமும் சொல்லாமல் அப்படியே தேள் கடித்த கையை தண்ணீருக்குள் விட வேண்டும். அந்த விஷம் இறங்கி வந்து எங்க கடித்ததோ அங்கேயே கொஞ்ச நின்றுவிட்டு வலியும் நின்றுவிடும். இதை வேற யாரும் அனுபவிச்சது இல்லை. நானே அனுபவிச்சு இருக்கேன். அப்ப கடிச்சா பதறி கதறக் கூடாது..விஷம் வேகமாக ஏறிவிடும். பயப்படாமல் தண்ணீருக்குள் கையை வைத்தால் விஷம் இறங்கிவிடும் என்று எங்கப்பா சொல்லி இருக்கிறார். எல்லாமே இருக்கு. எழுதி வைக்கப்பட்ட மருத்துவக் குறிப்புகள் கோடி கோடி. அதை எடுத்துக் கொண்டு போகத்தான் யாருமே இல்லை. ஒரு தலைமுறை விழிப்படைந்து வருகிறது. இவ்வாறு சீமான் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+