ஜனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி.. "பச்சை படுகொலை".. ஸ்டான் சாமி மரணம்.. சீமான் கொதிப்பு
சென்னை: சட்டத்தின் உதவியோடு, ஜனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஸ்டேன் சாமியைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு என்று ஸ்டேன் சாமியின் மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாக ஸ்டேன் சாமி கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். உடல்நிலை மோசமானதை அடுத்து இவர் கடந்த சில வாரமாக தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார்.
பெயில் கிடைக்காத நிலையில் இன்று மருத்துவமனையில் இவர் மரணம் அடைந்தார். ஸ்டேன் சாமி மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஐயா ஸ்டேன் சுவாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகச் சமரசமற்ற வகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகக் குரல்கொடுத்து வரும் ஐயா ஸ்டேன் சாமி அவர்கள்.

அரசு
இவர் மத்தியில் ஆளும் மோடி அரசின் எதேச்சதிகாரப்போக்காலும், கொடுங்கோன்மை சட்ட நடவடிக்கைகளாலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, பொய் வழக்குத்தொடுக்கப்பட்டு, பயங்கரவாதியென முத்திரைக் குத்தப்பட்டுக் கொடும் சிறைவாசத்திற்கு உள்ளான நிலையில் விடுவிக்கப்பட்டு விடுவார் என நம்பியிருந்த நிலையில், மறைவெய்திவிட்டதாகத் தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கு
பீமா கொரோகான் வழக்கின் கீழ் தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் மூலம் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்டு, பல மாதங்கள் சிறைப்படுத்தப்பட்ட பின்னர், தனது வயது மூப்பையும், உடல்நலிவையும், தனது தரப்பு நியாயத்தையும் பலமுறை அவர் எடுத்துக்கூறியப் பிறகும்கூட, விடுவிக்காது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும், பழிவாங்கும் போக்கோடும் அவரைத் தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தி அவரது உடல்நலனைக் குன்றச் செய்த பாஜக அரசின் செயல்பாட்டின் விளைவாகவே அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது. சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஐயா ஸ்டேன் சுவாமி அவர்களைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு.

சட்டம்
தேசியப் புலனாய்வு முகமை சட்டமானது சனநாயகவாதிகளை அடக்கி ஒடுக்கவே பயன்படுமென எச்சரித்தும், அதனை ஆதரித்தன திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். இன்றைக்கு அச்சட்டத்தினைக் கொண்டு அடக்கி ஒடுக்கி சனநாயகவாதிகளைப் பலியெடுத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. அச்சட்டத்தை ஆதரித்த எதிர்க்கட்சிகள் இப்போது என்ன செய்யப் போகிறது? கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற கருத்தாளர்களையும், செயற்பாட்டாளர்களையும் துப்பாக்கியின் மூலம் கொன்று தீர்த்தவர்கள், இப்போது சட்டத்தின் மூலம் ஸ்டான் சுவாமியைக் கொன்றிருக்கிறார்கள்.

நீதித்துறை
இதைத் தடுத்திருக்கவேண்டிய நீதித்துறையும் கைவிட்டது தான் பெருங்கொடுமை. இதே வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள, ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லகா, சுதா பரத்வாத் போன்றவர்களின் நிலை பெரும் கவலையைத் தருகிறது. சனநாயகவாதிகளையும், சமூகச்செயற்பாட்டாளர்களையும் சமூகத்திற்கு எதிரானவர்களாகக் கட்டமைத்து, சட்டத்தைக் கொண்டு அவர்கள் மீது கொடுங்கோல் போக்கினைக் கட்டவிழ்த்து விடும் மோடி அரசின் சனநாயகவிரோதச் செயல்பாடுகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது.

இரங்கல்
தனது வாழ்வின் பெரும்பகுதியினைப் பழங்குடி மக்களுக்காகவும், சனநாயகத்தை நிலைக்கச் செய்வதற்கான பணிகளுக்காகவும் செலவிட்டு, அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்திட்ட ஐயா ஸ்டேன் சாமி அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றென்றும் நீங்காப் புகழ்பெற்று வாழ்ந்துகொண்டுதானிருப்பார். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications