நாங்க காளியம்மாளை பிசுறுன்னு சொல்லுவோம்.. அதுல உனக்கு என்ன ****? மேடையிலேயே சீறிய சீமான்!
சென்னை: நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாவை அநாகரீகமாக பேசியது பற்றி வெளியான ஆடியோக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். சீமான் அளித்துள்ள விளக்கம் மக்கள் இடையே அதிர்ச்சியை.. விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக அந்த கட்சியின் நிர்வாகி காளியம்மாள் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். காளியம்மாள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று மயிலாடுதுறை நாம் தமிழர் வேட்பாளருக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த தேர்தலில் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தும் அவர் தோல்வி அடைந்தார்.

இங்கே காங்கிரஸ் சார்பாக கடைசி கட்டத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர். சுதா வெற்றிபெற்றார். 518,459 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர் பாபு 247,276 வாக்குகள் பெற்றார். பாமக வேட்பாளர் ஸ்டாலின் 166,437 வாக்குகள் பெற்றார். இங்கே நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 4ம் இடம் பிடித்தார். அவர் வெறும் 127,642 வாக்குகள் பெற்றார்.
பிசிறு கிண்டல்; இந்த நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாவை அநாகரீகமாக பேசியது பற்றி வெளியான ஆடியோக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். சீமான் அளித்துள்ள விளக்கம் மக்கள் இடையே அதிர்ச்சியை.. விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில் சீமான் காளியம்மாளை விமர்சனம் செய்வது போல் ஆடியோ இருந்தது. அதில், காளியம்மாள் எல்லாம் தட்டி விடலாம். அவர் பெரிய ஆள் இல்லை. அவர் ஒரு பிசிறு. காளியம்மாள் எல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லை. அவள் எல்லாம் வெறும் பிசிறு அவ்வளவுதான். இப்போது வந்துவிட்டு ஆடிக்கொண்டு இருக்கிறாள். வளர விட கூடாது என்று சீமான் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.
ஆடியோ சர்ச்சை: ஆடியோ வெளியான சமயத்தில் இதை நாம் தமிழர் பலர் மறுத்தனர். அதாவது இதை சீமான் பேசவில்லை என்று கூறி மறுத்தனர். இது ஏஐ என்றும் கூட விளக்கம் கொடுத்தனர். இது சீமானின் பேச்சு கிடையாது என்று கடுமையாக பதில் வாதம் வைத்தனர். அந்த சமயத்தில் நாம் தமிழர் காளியம்மாள் எதுவும் பேசவில்லை. காளியம்மாள் எந்த மறுப்போ.. எதிர்ப்போ இதில் தெரிவிக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் காளியம்மாவை அநாகரீகமாக பேசியது பற்றி வெளியான ஆடியோக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், தீடீரென இந்த வெண்ணெய்களுக்கு காளியம்மாள் மீது பாசம். டேய்... அவள்தான் மயிலாடுதுறையில் போட்டியிட்டேளே.. ***** அப்போதே அவளை ஜெயிக்க வேண்டியது தானே. வெண்ணெய்களா அப்போது ஏன் ஓட்டு போடவில்லை.
அவளுக்கு வேலை பார்த்து இருக்கலாமே.. நாங்கள் பிசுறுன்னு சொல்லுவோம்.. கொசுறுன்னு சொல்லுவோம். உங்களுக்கு என்ன ******க்கு பிரச்சனை. உங்களுக்கு என்ன பிரச்சனை நான் அவளை எப்படி கூப்பிட்டால் என்ன நான் என்ன வேண்டுமானாலும் சொல்வேன். நீ அவளுக்கு வேலை பார்த்தாயா.. உனக்கு என்ன? என்று கடுமையாக பேசி இருந்தார். சீமான் அளித்துள்ள விளக்கம் மக்கள் இடையே அதிர்ச்சியை.. விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications