நாம் தமிழர் நோட்டீஸ்.. பார்த்ததும் ஷாக்கான தம்பிகள்.. யார் பார்த்த வேலை இது? சீமானுக்கு தெரியுமா?
சென்னை: சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. சீமான் கேட்டிருந்த கரும்பு சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் தமிழர் கட்சியினருக்கு சின்னம் தொடர்பாக பெரிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார்.

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.
ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில்தான் அந்த கட்சியின் கரும்பு சின்னம் பறிபோய் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக கிட்டத்தட்ட மாறி இருந்த இந்த சின்னம் தற்போது கர்நாடகாவில் இருக்கும் கட்சிக்கு சென்றுவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கூட, சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது.
உங்களுக்கு இந்த சின்னம் வேண்டும் என்றால் நீங்கள் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருக்க வேண்டும். அப்போது தாமதம் செய்துவிட்டீர்கள். இப்போது கேட்டு என்ன பலன். அதோடு இந்த சின்னம் உங்களுக்கு ராசியான சின்னம் போலவும் தெரியவில்லை. என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2019 லோசபா தேர்தல் தொடங்கி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் போட்டி: நாம் தமிழர் கட்சியிடமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சின்னத்தோடு அந்த கட்சி தற்போது தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாம். பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டி போட முடிவு செய்துள்ளது., தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் நாம் தமிழர் வாக்குகள் வெகுவாக சிதறும் வாய்ப்புகள் உள்ளன. சீமான் கேட்டிருந்த கரும்பு சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் தமிழர் கட்சியினருக்கு சின்னம் தொடர்பாக பெரிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
என்ன நடந்தது?: அதன்படி சென்னை மதுரவாயல் பகுதியில் சீமான் படம் போட்டு கூடவே கரும்பு விவசாயி படமும் போட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை யார் கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை. நாம் தமிழர் வேட்பாளருக்கு வாக்கு கேட்டு உள்ளனர்.
ஆனால் கரும்பு விவசாயி சின்னம் கொடுக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதை நாம் தமிழர் நிர்வாகிகளே தவறுதலாக செய்துவிட்டனரா அல்லது வேறு யாரும் இப்படி செய்கின்றனரா என்ற விவரம் வெளியாகவில்லை. சீமான் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல வேண்டும் என்று நாம் தமிழர் நிர்வாகிகள் புகார் வைத்து வருகின்றனர் .
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications