அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடு எப்படி தரலாம்? "கண்கள் சிவக்க" புது பஞ்சாயத்தை கூட்டிய சீமான்!
சென்னை: அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியது வஞ்சகம், துரோகம் எனவும் சாடி உள்ளார் சீமான்.
2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த போது பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் 3% உள் இடஒதுக்கீடு அருந்ததியருக்கு வழங்க வகை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் ஆதி திராவிடர்கள் எனப்படும் எஸ்சி சமூகத்தினருக்கான மொத்த இடஒதுக்கீடு 18%. இதில் 3.5% அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பொதுவாக இந்த உள் இடஒதுக்கீடு பெரும் வரவேற்பைப் பெற்றது. அருந்ததிய சமூகத்தினரும் 3% இடஒதுக்கீட்டால் பயனடைந்து வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தொடத் தொடங்கினர். ஆனால் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இந்த 3% உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் 3 ஆண்டுகளுக்கு முன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதன் பின்னர் அருந்ததியர் விவகாரம் ஓய்ந்தது.
அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாட்டில் மலம் அள்ளுவதற்காக விஜயநகரப் பேரரசு காலத்தில் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள்தான் அருந்ததியர் என குறிப்பிடும் வகையில் அதாவது அருந்ததியர்கள் தெலுங்கு வந்தேறிகள் எனும் பொருளில் பேசினார். சீமானின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் கட்சியினர் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. சில இடங்களில் சீமான் கட்சியினர் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டின் பல இடங்களில் சிமான் கொடும்பாவி எரிக்கப்பட்டது. பல இடங்களில் நாம் தமிழர் கட்சி கொடி கம்பங்கள் வெட்டப்பட்டன.

தற்போது மீண்டும் அருந்ததியர் சமூகத்துடன் மோதும் வகையில் 3% உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக சீமான் பேசியிருக்கிறார். இது மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அகில இந்திய பார்வார்டு கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த மூக்கையாதேவர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் சீமான் பங்கேற்றார். பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: முத்துராமலிங்க தேவருக்கு ஒரு மாலை வைத்தால் போதும்; தேவர் வாக்கு வந்துவிடும் என நினைக்கிறது தமிழ்நாடு அரசு. பூலித்தேவன், வேலுநாச்சியார், மருதுபாண்டியரை கண்டு கொள்ளாத தமிழ்நாடு அரசு.
அண்ணாவுக்கு தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைத்தது மூக்கையா தேவர்தான். 1977-ல் மூக்கையாதேவர் உசிலம்பட்டியில் போட்டியிட்ட போது, அவருக்கு எதிரான வேட்பாளரை திரும்பப் பெற்றார் எம்ஜிஆர். அதில் நான் எம்ஜிஆரை பாராட்டுகிறேன்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்ற உரிமை கூட கையில் வைத்துக் கொள்ளாமல் திமுக ஏன் மாநில உரிமை குறித்து பேசுகிறது. 18 ஆண்டுகள் மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஒரே இந்திய கட்சி திமுக. அப்போது இந்த உரிமையை பெற முடியவில்லையா?
உங்கள் வீட்டில் 2 அமைச்சர்கள். உங்கள் ஜாதி மொத்தம் எத்தனை பேர்? கணக்கெடுத்து பாருங்கள்.. அப்போது தெரிந்துவிடும் எத்தனை ஆண்டுகள் எங்களை ஏமாற்றினீர்கள் என்பது. எஸ்சியாக இருக்க விரும்பவில்லை என்கின்றனர் தேவேந்திரர். அவர்களுக்கான இடஒதுக்கீட்டை பிசி, எம்பிசி பட்டியலில் வைத்து கொடுக்க வேண்டியதுதானே?
எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம்; இடப் பங்கீடுதான். ஏற்கனவே போராடித்தான் ஆதி தமிழ்க் குடிகள் (எஸ்சி) 18% இடஒதுக்கீடு வைத்திருக்கிறோம். அதில் 3% உள் இடஒதுக்கீடாக அருந்ததியருக்கு ஏன் கொடுத்தீங்க? ஏன் உள் இடஒதுக்கீடு கொடுத்தீங்க? தனி இடஒதுக்கீட்டை உருவாக்கித் தர வேண்டியதுதானே.. முழுவதும் வஞ்சகம், துரோகம், ஏமாற்று.. இவ்வாறு சீமான் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications