விடாமல் அண்ணாமலையை அட்டாக் செய்யும் சீமான்.. என்ன காரணம்.. பின்னணியில் நடந்தது இதுதான்?
சென்னை: அண்ணாமலையை சீமான் தொடர்ந்து தாக்குகிறார். சின்னம் போனதற்கு அண்ணாமலைதான் காரணம். வெளியே என்ன வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அதுதான் உண்மை என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நாம் தமிழர் - பாஜக இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டு உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதுகின்றன. முன்னதாக கரும்பு விவசாயி சின்னத்தை இழக்க பாஜகதான் காரணம் என்று சீமான் குற்றச்சாட்டு வைத்ததில் இருந்து மோதல் தொடங்கியது.

சின்னம் பிரச்சனை; சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. சீமான் கேட்டிருந்த கரும்பு சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் தமிழர் கட்சியினருக்கு சின்னம் தொடர்பாக பெரிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார். இதற்கு பாஜகதான் காரணம் என்று சீமான் புகார் வைத்தது பெரிய பிரச்சனை ஆனது.
சீமான் அட்டாக்; அதன்பின் மதுரை லோக்சபா தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளர் சத்யா தேவியை ஆதரித்து சில நாட்களுக்கு முன்பு கோ.புதூரில் சீமான் பரப்புரை பொதுக் கூட்டம் நடத்தினார். அதில் பேசிய சீமான், அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல். நான்தான் அவரை பாஜகவிற்கு அனுப்பியுள்ளேன். என் மண் என் மக்கள், வேல் யாத்திரை எல்லாம் நான் எடுத்த முன்னெடுப்புகள்தான். அதனால் மோடி, என் தம்பி அண்ணாமலை, எனக்கு (சீமான்) வேலை செய்கிறார் என்பதை கவனத்தில் வைத்து வேலை செய்யுங்கள்
அவர் மேலும் பேசுகையில் தாய் மீதும் தமிழ் மீதும் உறுதியாக சொல்கிறேன். பதவிக்காகவோ பணத்திற்காகவே வந்தவர்கள் அல்ல நாங்கள். மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வந்துள்ளோம். ஒரே ஒரு முறை எங்களை நம்பி வாக்களித்து பாருங்கள், என்று கூறினார்.
அண்ணாமலை: இதற்கு கோவை கவுண்டம்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அதில், சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை. அதனால் அண்ணாமலை மீது சீமான் அண்ணன் உட்கார்ந்துவிட்டார்.
சீமானை பொருத்தமட்டில் இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இன்று களத்தில் பாஜக தனித்து நிற்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து நிற்கிறது. பிரதமராக மீண்டும் மோடி வர போகிறார் என்பது மக்களுக்கு மிகவும் நன்றாக தெரியும். ஆதரவெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத்தான். தன்மீது உள்ள தவறை மறைக்க பாஜக மீது குற்றம் சாட்டுகிறார் சீமான் என்று அண்ணாமலை பதில் அளித்தார்.
சீமான் பதிலடி: இதற்கு சீமான் அளித்த பதிலில், தம்பி அண்ணாமலை என்னுடைய தம்பி என்னுடைய ரத்தம் அவன் பேசுவதும் நான் பேசுவதும் ஒன்னு தான். தம்பி அண்ணாமலை நீ எடுத்திருக்கிறது வெறும் போலீஸ் TRAINING; நா எடுத்திருக்கிறது போராளி TRAINING என்று மயிலாப்பூரில் பரப்புரையின்போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி பதிலடி கொடுத்தார்.
என்ன காரணம்: சீமான் அண்ணாமலை மோதலுக்கு என்ன காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சீமான் அண்ணாமலை மீது கோபத்தில் இருக்கிறார். அதனால்தான் அண்ணாமலையை சீமான் தொடர்ந்து தாக்குகிறார். சின்னம் போனதற்கு அண்ணாமலைதான் காரணம். வெளியே என்ன வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அதுதான் உண்மை.
சின்னத்தை பிடுங்க ஒரு காரணம் அண்ணாமலைதான். தேர்தல் ஆணையம் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால்தான் சின்னம் போனது. தேர்தல் ஆணைய அதிகாரிகளே ஒரு காலத்தில் அமித் ஷா டீமில் இருந்தவர்கள். அவசர அவசரமாக தேர்தல் ஆணையரை தேர்வு செய்துள்ளனர்.
அவர்கள் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கின்றனர். கரும்பு விவசாயி பிடுங்க அண்ணாமலை காரணம். சின்னம் போனதற்கு அண்ணாமலைதான் காரணம். வெளியே என்ன வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அதுதான் உண்மை.
நாம் தமிழர் மூன்றாம் இடம் வந்தால் நாம் 4ம் இடத்திற்கு போவோம் என்று அண்ணாமலைக்கு பயம். அதனால் அண்ணாமலை சின்னத்தை பிடுங்க பிளான் போட்டு இருக்கிறார். அப்படித்தான் திட்டமிட்டு நீக்கி உள்ளனர். 2026 தேர்தலுக்கு முன் 3ம் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அண்ணாமலை சீமான் சின்னத்தை பிடுங்கி உள்ளார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications