அதிமுக வரலாற்று பழியைச் சுமக்க நேரிடும்... சீமான் கடும் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: மத்திய அரசின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் அதிமுக அரசு இணைந்தால் அந்தக் கட்சி வரலாற்று பழியைச் சுமக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் அளிப்பதாக கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒற்றை முகமாக மாற்ற மத்திய பாஜக அரசு துடியாய் துடித்து வருவதாகவும், அதற்கான முன்நகர்வாகவே இது போன்ற திட்டங்களை உட்புகுத்தி கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்குவதாகவும் சாடியுள்ளார். தமிழகத்தை வட இந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்ற ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் பயன்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே லட்சக்கணக்கான வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் புகுந்த வாக்குரிமையை பெற்று தமிழர்களின் அரசியலை பங்கிட்டு வரும் சூழலில், இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால் தமிழர்கள் பெரிய அபாயத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் எனக் கூறியிருக்கிறார்.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் முழுக்க முழுக்க தமிழர்களின் உணவுச் சுரண்டலுக்கும், உரிமைப்பறிப்புக்குமே வழிவகுக்கும் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு செய்வது மிகப்பெரிய மோசடித்தனம் எனவும் தாக்கியுள்ளார். பாஜக அரசின் பாசிச நடவடிக்கைக்கு அதிமுக அரசு துணை போகும் செயல் தமிழர்களுக்கு செய்யும் பச்சைத்துரோகம் என சீமான் சாடியுள்ளார்.
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் பேராபத்தை உணர்ந்து, தமிழக அரசு அதை எதிர்க்க வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் சீமான்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications