மானுஷ் மீது தாக்குதல்.. பாஜக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்
Recommended Video
சென்னை: சமூக ஆர்வலரும், சூழலியல் செயற்பாட்டாளருமான பியூஷ் மானுஸ் சேலத்தில் பாஜக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;
நாட்டில் நிலவும் பொருளாதார தேக்கம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக சேலம் பாஜக அலுவலகத்தில் பியூஷ் மானுஸ் மீது கண்மூடித்தனமாக தாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார். கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமே தவிர ஒருமையில் விளிப்பதும், மிரட்டுவதும், தாக்குவதும் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்திருக்கிறார் சீமான்.

பாசிச செயல்
கருத்தியலால் வீழ்த்த வேண்டுமே தவிர வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது சனநாயகத்தை கொலை செய்யும் பாசிச நடவடிக்கைகள் என விமர்சித்திருக்கிறார். பியூஷ் மானுஸ் மீது தாக்குதல் நடத்தியது அரசியல் அநாகரீகம் என்றும், வன்முறை வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பது அரசின் தலையாய கடமை எனவும் சீமான் தமது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
கைது செய்யவேண்டும்
பியூஷ்மாணுஸை தாக்கியவர்களை உரிய சட்டப்பிரின் படி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை தாம் கேட்டுக்கொள்வதாக சீமான் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications