யுபிஎஸ்சி தேர்வில் 56 பேர் தேர்ச்சி! நான் முதல்வன் திட்டத்தின் முதற்பகுதியே இப்படியா? ஸ்டாலின்
சென்னை: நான் முதல்வன் திட்டத்தில் பயின்று 56 மாணவர்கள் மத்திய தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அது போல் நான் முதல்வன் திட்டத்தின் 2.0 எப்படி இருக்குமோ என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 🎓 #NaanMudhalvan2Point0 பற்றி #StalinStatement-இல் அறிவித்த நாளில் இத்தகைய வெற்றிச் செய்தி வெளியானது பெரும் ஊக்கமளிக்கிறது.

🎓 நான் முதல்வனின் முதற்பகுதியே இத்தனை சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறதென்றால், இதன் அடுத்த version எப்படி இருக்குமென நீங்களே பாருங்கள்...
🎓 நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி, International அளவிலும் சாதனை படைக்கப் போகிறார்கள்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வு 2025 இறுதி முடிவுகள் மார்ச் 6, 2026 அன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (Union Public Service Commission) வெளியிடப்பட்டுள்ளன. இது ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS), ஐஎஃப்எஸ் (IFS) உள்ளிட்ட உயர் அரசுப் பணிகளுக்கான முக்கிய தேர்வாகும்.
இந்த ஆண்டு 958 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். முதல் இடத்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி (Anuj Agnihotri) பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி (மதுரை வாடிப்பட்டி) அகில இந்திய அளவில் 2ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா மொகைதீன் (சென்னை) அகில இந்திய அளவில் 7ஆம் இடத்தை பிடித்துள்ளார். முடிவுகள் upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன. இறுதி ரேங்க் பட்டியலை (Civil Services (Main) Examination, 2025 - Final Result) பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண்கள் (marks) விரைவில் தளத்தில் கிடைக்கும்.
இத்தேர்வு மெயின்ஸ் (ஆகஸ்ட் 2025) மற்றும் நேர்முகத் தேர்வு (பிப்ரவரி 2026) மதிப்பெண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு ஐஏஎஸ் (180 இடங்கள் உட்பட), ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணிகளில் பதவி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகத்தில் இருந்து பலர் தேர்ச்சி பெற்றுள்ளதால், ஆசிரியர்கள், பயிற்சி மையங்கள் மற்றும் மாணவர்களிடையே மகிழ்ச்சி நிலவுகிறது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications