அதிமுக கூட்டணிக்கு நாடார் சங்கம் ஆதரவு.. 'யூடியூபர்' முக்தார் மீது நடவடிக்கை எடுக்காததால் முடிவு
சென்னை:காமராஜர் குறித்து அவதூறு பரப்பிய 'யூடியூபர்' முக்தார் அகமது மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி ஒட்டுமொத்த நாடார்களும், காமராஜரின் தொண்டர்களும் தொடர்ந்து போராடியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி திராவிட மாடல் ஆட்சி நாடார் விரோத ஆட்சியாக மாறிவிட்டது. எனவே அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் என தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் கூறியுள்ளார்.
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "2021 முதல் 2026 வரை நடைபெற்ற மு.க.ஸ்டாலின் ஆட்சியில் உழைப்பால் உயர்ந்த நாடார் சமுதாயத்தைப் பற்றியும், கல்வி கண் திறந்த காமராஜர் பற்றியும் எப்போதும் இல்லாத அளவுக்கு தி.மு.க.வினர் அவதூறுகளையும், பொய் செய்திகளையும் பேசியும், பதிவும் செய்து வந்தனர். தி.மு.க. அரசு கள்ளுக்கான தடையை நீக்கவில்லை. மாறாக தமிழ்நாடு முழுவதும் கருப்பட்டி, கல்கண்டு, பதநீர் விற்பனை செய்து வரும் பனை தொழிலாளர்கள் மீது சட்டவிரோதமாக போலீசார் மூலம் பொய் வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் குறித்து அவதூறு பரப்பிய 'யூடியூபர்' முக்தார் அகமது மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி ஒட்டுமொத்த நாடார்களும், காமராஜரின் தொண்டர்களும் தொடர்ந்து போராடியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி திராவிட மாடல் ஆட்சி நாடார் விரோத ஆட்சியாக மாறிவிட்டது. தி.மு.க. நாடார்களுக்கு 10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கலாம். எனவே அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை 234 தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் என்று உறுதி ஏற்கிறோம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
என்ன பிரச்சனை
முன்னாள் முதல்வரும், கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் என்று போற்றப்படும் காமராஜரை பற்றி அவதூறாக பேசிய யூடியூபர் முக்தார் அகமதுவை கண்டித்து நாடார் சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்பார்ட்டம் நடத்தினார்கள். இதுபற்றி அவர்கள் கூறும் போது, நாட்டு மக்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி கொடுத்தவர் காமராஜர். அவரை பற்றி யூடியூபர் முக்தார் அகமது அவதூறாக பேசியது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் அதிகமாக வரி கொடுக்கும் வணிகர்களை கள்ள நோட்டு அடிப்பவர்கள் என அவமானப்படுத்தும் நோக்கத்தில் முக்தார் தவறாக பேசி வருகிறார். அவர் மீது உடனடியாக தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..
மன்னிப்பு கேட்ட முக்தார்
அதேநேரம் முன்னதாக இந்த பிரச்சனை தீவிரமான போது, யூடியூபர் முக்தார் அகமது மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் வெளியிட்ட பதிவில், காமராஜர் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் முக்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்தளப்பதிவில், ''வணக்கம். என்னுடைய நேருக்கு நேர் நேர்காணலில் நான் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி வழக்கம் போல் சிலர் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். அதன் காரணமாக, நான் மதிக்கும் அந்த சமூக மக்கள் வேதனைப் படுவது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது.
காமராஜர் ஆட்சி குறித்து சில முக்கிய பிரமுகர்கள் முன் வைத்து வந்த விமர்சனங்கள் மற்றும் வெவ்வேறு சேனல்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்த கருத்துக்களின் அடிப்படையில், அரசியல் பார்வையில் ஒரு பத்திரிக்கையாளராக என்னுடைய நேர்காணலில் அதை வாசித்து விளக்கம் பெற முயற்சித்தேன். எதுவும் என்னுடைய தனிப்பட்ட விமர்சனங்களோ கருத்தோ அல்ல.
நான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நோக்கில் பயணிக்கிறவன். ஆகவே என்னுடைய நேர்காணல் மூலமாக குறிப்பிட்ட சமூக மக்களின் உணர்வுகள் புண்பட்டு இருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எப்போதும் போல, நாம் ஒற்றுமையாக இருப்போம்" இவ்வாறு முக்தார் அகமது கூறியிருந்தார்
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications