மண்டை ஓடு, சிறுநீர் குடிப்பது, மலத்தை உண்பது, மனித கறி உணவு- சீமான் சொல்லும் அந்த ‘அகோரிகள்’ யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகாலாந்து நாய்கறி விவகாரத்தில் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனித கறி சாப்பிடும் அகோரிகளை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து 'அகோரிகள்' சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கின்றனர்.

நாய்கறி சாப்பிடும் நாகாலாந்துகாரனுக்கே சொரணை வந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை விரட்டியடித்தான் என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. நாகாலாந்து மக்களை இழிவுபடுத்திவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் மிகத் தீவிரமாக பரப்புரை செய்தனர். ஆனாலும் நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

Nagaland Dog Meat row: Who are Aghori babas? Aghoris eat human flesh?

சீமான் கருத்து: இந்த பிரச்சனையில் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அகோரிகள் என்பவர்கள் உயிருள்ளவற்றை சாப்பிட மாட்டார்கள். காய்கறி கூட சாப்பிடுவதில்லை. மனித உடல் வெந்து கொண்டிருக்கும் போது அதில் இருந்து கறியை எடுத்து ரொட்டியில் வைத்து சாப்பிடுவார்கள்; மனித கறி சாப்பிடும் அகோரிகளை கைது செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

வட இந்தியர் தெய்வங்கள்: அகோரிகள்.. அகோரி பாபாக்கள் யார் இவர்கள்? அகோரிகளைப் பற்றி தென்னிந்தியர்களுக்கு அதிகம் தெரியாது. வட இந்தியாவில் கடவுளுக்கு நிகரானவர்கள் அகோரிகள். மிக கடுமையான உறைய வைக்கும் குளிரிலும் முழு நிர்வாணமாக உடல் முழுவதும் சாம்பலை பூசி கையில் மண்டை ஓட்டுடன் ஒரு அகோரி தென்பட்டுவிட்டால் போதும்.. அப்படி வட இந்தியர்கள் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவதை புனிதமாக கருதுவர். அகோரி பாபாக்கள் கேட்டதை எல்லாம் வாரி கொடுப்பார்கள்.. அகோரி பாபாக்களின் சாபங்களுக்கு ஆளாகாகக் கூடாது என்பதில் கவனமாக இருப்பர் வட இந்திய பக்தர்கள். அந்த அளவுக்கு அகோரிகளை சமய நம்பிக்கையின் அதி உச்சமாக, கடவுளுக்கு நிகரானவர்களாக பொதுமக்கள் வழிபடுகின்றனர்.

Nagaland Dog Meat row: Who are Aghori babas? Aghoris eat human flesh?

யார் இந்த அகோரிகள்?: கும்பமேளா காலங்களில்தான் இந்த அகோரிகளின் பல லட்சக்கணக்கில் ஒன்று கூடுவதை காண முடியும். அதுவரை இந்த அகோரிகளின் வாழ்விடம் எது? எங்கே என்ன செய்வார்கள்? என்பது யாருக்கும் பகிரங்கமாக தெரியாது. இந்த அகோரிகளுக்கு என அகாடாக்கள் என்ற அமைப்புகள் உண்டு; சைவ அகாடா, வைணவ அகடா எனவும் உண்டு. இந்த அகாடாக்கள்தான் ஒட்டுமொத்த அகோரிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அகாடாக்களுக்கான நிதி, செலவினங்கள் எதுவும் கேள்விக்குரியவையும் அல்ல. எந்த ஒரு அரசும் இந்த அகாடாக்களின் வரவு செலவு விவகாரங்களில் கை வைப்பதும் கிடையாது. அந்த அளவுக்கு பக்திமயமான நம்பிக்கையின் உச்சத்தில் அரசுகள் இருந்தன; இருக்கின்றன.

Nagaland Dog Meat row: Who are Aghori babas? Aghoris eat human flesh?

போதைப் பொருள் பிரசாதம்: இந்த அகோரிகளில் சிலர் உ.பி. காசி கரைகளில், குஜராத்தின் ஜூனாகாத், உத்தரகாண்ட் ஹரித்வாரில் முகாமிட்டு தங்கியிருப்பதும் உண்டு. கும்பமேளா எங்கு நடக்கிறதோ அங்கெல்லாம் முகாம்களை அமைத்து புனித நீராடிவிட்டு 'நடமாடும்' மர்ம இடத்துக்கு திரும்புவது அகோரிகளின் வாழ்க்கை. இந்த அகோரிகளிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் தடையின்றி இருக்கும். இவர்களுக்கு போதைப் பொருட்களை வழங்குவதையே காணிக்கையாக கருதுகிறவர்கள் வட இந்திய பக்தர்கள். இவர்களிடம் இருந்து போதைப் பொருட்களை சிறிதேனும் பெறுவதை பிரசாதகமாகவும் கருதுகின்றனர்.

Nagaland Dog Meat row: Who are Aghori babas? Aghoris eat human flesh?

மனித மாமிசம், சிறுநீர், மலம்: இந்த அகோரிகள்தான் சமூகத்தின் யதார்த்த வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்வியலை வாழ்கின்றனர். உ.பி. காசி கங்கை கரைகளில் சடலங்கள் இடைவிடாமல் எரிக்கப்படும். இந்த சடலங்களை சூழ்ந்து நிற்கும் அகோரிகள் மனித உடல்களின் பாகங்களை பிய்த்து எடுத்து அதையே உணவாக உட்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இறந்த உடல்களுடன் உடலுறவு கொள்வதை கூட ஒப்புக் கொள்கிற அகோரிகளும் இருக்கின்றனர். தங்களுடைய சிறு நீரை தாங்களே குடிப்பது; தங்களுடைய மலத்தை தாங்களே உண்பது என யதார்த்தத்தை மீறிய ஒரு மூர்க்க வாழ்க்கையை கடவுளின் பெயரால் வாழ்கின்றனர் இந்த அகோரிகள். இந்தியா முழுவதும் எத்தனை ஆயிரம் அகோரிகள் இருக்கிறார்கள்? அகோரிகளின் அகாடாக்கள் என்னதான் செய்கின்றன? அரசியலுக்கும் அகோரிகளுக்குமான உறவு என்ன? விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிற பாரத தேசம் இன்னமும் தர்மங்களின் பெயரால் ஆன்மீக நம்பிக்கைகளின் பெயரால் அரதப் பழமையான ஒரு வாழ்வியலை பின்பற்றும் சமூகத்தை மதிப்பதும் போற்றுவதும் சரியா? என்பதெல்லாம் விவாதிக்கப்பட்டு தீர்வு காண வேண்டியது என்கின்றனர் சமூக ஆய்வாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+