பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்கள்.. 'பாவம்' செய்த பாதிரியார்.. பெனடிக்ட் ஆன்றோவுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: இளம்பெண்களுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிற்கு நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ. பெனடிக்ட் ஆன்றோ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பாதிரியாராக பணியாற்றி உள்ளார். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இளம்பெண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் காலில் நிர்வாணமாக பேசிய காட்சிகள் என முகம் சுளிக்கும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார்.
தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் பெனடிக் ஆன்றோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவு ஆனார். அவரை தனிப்படை அமைத்து பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடி வந்த நிலையில், நாகர்கோவிலில் வைத்து போலீசாரிடம் சிக்கினார்.
அவரை கைது செய்த போலீசார் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் முதலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிரியார் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஒருநாள் காவலில் எடுத்தும் போலீசார் விசரணை நடத்தினர்.
பெனடிக்ட் ஆன்றோ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீசார் நடவடிககி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரி நாகர்கோவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதில் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது. அவர் மற்றொரு வழக்கிலும் கைதாகி இருந்ததால் அவரால் வெளியில் வர முடியவில்லை.

இந்த நிலையில், மற்றொரு வழக்கிலும் பெனடிக் ஆன்றோவிற்க்கு நாகர் கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications