கள்ளக்காதலியும், கணவரும்.. அதெப்படி ஒரே வீட்டில்? கோர்ட்டுக்கு ஓடிய நாகர்கோவில் பெண்! நீதிபதி அதிரடி
சென்னை: கள்ளக்காதல் நாடு முழுவதுமே பெருகி வரும் சூழ்நிலையில், குடும்ப உறவுகளும் முறிந்து வருகின்றன. கணவனை மனைவி கொல்வதும், மனைவியை கணவன் கொல்வதும் என கள்ளக்காதல் வன்முறைகளும் பெருகிவிடுவதால், இவர்களையே நம்பியிருக்கும் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை தொலைத்து நிற்கிறார்கள்.. வடமாநிலங்கள் போலவே தமிழகத்திலும், கள்ளக்காதல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையை உண்டுபண்ணி வருகிறது. கன்னியாகுமரியில் நேற்று என்ன நடந்தது?
4 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. திருவேற்காடு, டி.டி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த 47 வயது சிவகுமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.. விஜயகுமாரி என்ற மனைவியும், இரண்டு பெண் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகளும் இவருக்கு உள்ளனர்.

பைக்கில் வந்த 2 பேர்
சம்பவத்தன்று, பள்ளியில் படித்துவரும் பிள்ளைகளை அழைத்து செல்வதற்காக ஆட்டோவில் சிவக்குமார் சென்றுள்ளார்.. அப்போது பைக்கில் வந்த 2 பேர் கத்தியால் சிவகுமாரின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்.
சிவக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், அதில் ஒருவருடன் பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததால், அதுதொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அதே பகுதியிலுள்ள சுரேஷ் என்பவருடன், சிவக்குமார் மனைவிக்கு விஜயகுமாரிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது..
மனைவியின் கள்ளக்காதல்
இருவரும் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். மேலும், செல்போனில் பேசுவதும், சிவகுமாருக்கு தெரிய வந்துள்ளது. சுரேஷ் மற்றும் மனைவியை சிவகுமார் கண்டித்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், சிவக்குமாரை கொலை செய்ய முடிவெடுத்தார்..
இதற்காகவே கூலிப்படையை வைத்து, சிவக்குமாரை ஒரு வாரம் வேவு பார்த்து, அதற்கு பிறகு வெட்டி கொன்றுள்ளதும் அம்பலமாகியிருக்கிறது.. இப்போது கள்ளக்காதலன் சுரேஷ், உட்பட ரவுடி லால் என்கிற பிரகாஷ், கல்லூரி மாணவர் மோகன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றொரு கள்ளக்காதல் கொடுமை நடந்துள்ளது.
நாகர்கோவில் மனைவி
நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா (வயது 36). இவர் நாகர்கோவில் கூடுதல் மகிளா கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் சொல்லியிருப்பதாவது:
நானும், வடிவீஸ்வரத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் உமா சங்கரும் (40) கடந்த 2007-ம் ஆண்டு கழுகுமலையில் உள்ள இந்து கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது கணவரின் நகைக்கடையில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவருக்கும் எனது கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
நிற்கதியாக நிற்கிறேன்
அவரது தூண்டுதலின் பேரில் என்னை கணவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொடுமைப்படுத்தினார். அத்துடன் என் கணவரும் அந்த பெண்ணும் சட்டவிரோதமாக கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் நான் நிற்கதியாக நிற்கிறேன். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்றைய தினம் விசாரித்த நீதிபதி நாகர்கோவில் மகளிர் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார், பிரபாவின் கணவர் உமா சங்கர் மற்றும் அவரது கள்ளக்காதலி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications