கமலாலயத்தில் அண்ணாமலை பெயர் அழிக்கப்பட்டதா? பரபரப்பான பாஜக.. ஆனா நடந்ததே வேறயாமே! வீடியோ பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவருக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தமிழக பாஜக தலைவராக நாளை பதவி ஏற்பது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்த போது அண்ணாமலையும் கலந்து கொண்ட நிலையில், கட்சி அலுவலகத்தில் அவர் பெயரை யாரோ சிலர் ஸ்கெட்ச் கொண்டு அழித்ததாக கூறப்பட்ட நிலையில், அது அருகில் இருந்த பெயர்ப் பலகையின் நிழல் என வீடியோ வெளியாகியுள்ளது.

பெரும் பரபரப்புகளுக்கு இடையே தமிழக பாஜக தலைவர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக அப்போதைய துணைத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலை அண்ணாமலை தலைமையில் பாஜக எதிர்கொண்டது.

Nainar Nagendran BJP Annamalai

அதிமுகவும் கூட்டணியில் இல்லாத நிலையில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெல்ல முடியவில்லை. தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என அவ்வப்போது தகவல் வெளியான நிலையில் பாஜக தலைமை தெளிவான விளக்கத்தை சொல்லவில்லை.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தமிழக பாஜக தலைவர் மற்றும் இருக்கும் என கூறப்பட்டது. எதிர்பார்த்தது போலவே டெல்லி தலைமை, பாஜக தலைவர் தேர்தலையும் அறிவித்தது. தொடர்ந்து கட்சி தேர்தல் விதிகளை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அண்ணாமலை போட்டியில் இல்லை என தெளிவாக கூறிவிட்டார். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பாஜக தலைவர் போட்டியில் இருந்தனர். இந்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறும் எனவும் நாளை தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மட்டுமே தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அவரது உடன் முன்னாள் தலைவர்கள் ஆன பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், மூத்த தலைவர்களான எச். ராஜா, வானதி சீனிவாசன் தற்போது தலைவராக இருக்கும் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நயினாரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் தலைவராவது உறுதியாகி உள்ளது.

நாளை பதவியேற்பு விழா நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2001 முதல் அதிமுகவில் பயணித்த நாகேந்திரன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் தனக்கான முக்கியத்துவம் குறைந்ததாக எண்ணி பாஜகவில் இணைந்தார். இணைந்த உடனே அவருக்கு துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து 2021 தேர்தலில் நெல்லையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்த நிலையில், துணை தலைவர் பதவியால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

தொடர்ந்து பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற டெல்லிக்கு காய் நகர்த்தி வந்தார். இந்த நிலையில் தான் தற்போது தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாளை பதவி ஏற்பு விழா நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செய்த நயினார் வேட்பு மனு தாக்கல் செய்த போது அண்ணாமலையும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற தலைவர்கள் சிரித்த முகத்துடன் இருந்தபோது அண்ணாமலை சற்று அதிருப்தியில் இருப்பதாகவே தோன்றியது.

Nainar Nagendran BJP Annamalai

இந்த நிலையில் கமலாலயத்தில் அண்ணாமலையின் பெயர் அழிக்கப்பட்டதாக திடீரென சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. பாஜக அலுவலகத்தில் மாநில தலைவருக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் அண்ணாமலை மாநில தலைவர் என எழுதப்பட்டிருந்த பெயர் பலகையை மார்க்கர் கொண்டு சிலர் அழித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அது உண்மை இல்லை. அண்ணாமலையின் பெயருக்கு அருகிலேயே இதுவரை தமிழக பாஜக தலைவர்களாக பதவி வகித்தவர்களின் பெயர் ஒரு பலகையில் இடம் பெற்று இருந்தது. புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டால் அவர்கள் பெயர் இடம்பெற வசதியாக கோடுகள் கிழிக்கப்பட்டிருந்தது. அந்த கோடுகள் அண்ணாமலையின் பெயர் பலகையின் மீது எதிரொலித்ததால் அது மார்க்கர் கொண்டு அழித்தது போல காணப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+