தமிழகத்தில் கூட்டணி ஆட்சி! பாஜகவில் இருந்து 20 அமைச்சர்கள்! எடப்பாடிக்கு நயினார் நாகேந்திரன் ஷாக்
சென்னை: தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும் பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் ஆவார்கள் என அவர் தெரிவித்துள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையில் பாஜக தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பேசிய அவர், "இங்கிருந்து 20 முதல் 30 பேர் சட்டசபைக்கு செல்வார்கள். அது நடக்கும். பலர் அமைச்சர்களாக வருவார்கள்" என்று உறுதியாக கூறினார். அப்போது மேடையில் இருந்த பாஜக மூத்த நிர்வாகி வி.பி.துரைசாமி, "அவர்கள் அமைச்சர்களாகக் கூட வரலாம்" என தெரிவித்ததை சுட்டிக் காட்டிய நயினார் நாகேந்திரன், "நிச்சயமாக வி.பி.துரைசாமி சொல்வதைப் போல நடக்க வாய்ப்புள்ளது" என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பிரதமர் மோடியின் தமிழக வருகைக்குப் பிறகு தொடங்கும் என்றும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதாகவும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
"இறைவன் நினைத்தால் நிச்சயம் நடக்கும். ஊடகங்களில் வரும் செய்தி குறித்து கவலைப்பட வேண்டாம். யார் கட்டம் கட்டி செய்தி போட்டாலும் சரி, நாங்கள் இந்த ஆட்சியை கட்டம் கட்டுவதில்தான் இருப்போம்" எனவும் அவர் கூறினார். இந்த பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா புதிய கட்சி தொடங்கியது குறித்து கேள்விக்கு, "பலர் புதிய கட்சிகளை ஆரம்பித்துள்ளனர். ஆனால் எங்களைப் பொறுத்தவரை மக்கள் தற்போது பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பக்கம் இருக்கிறார்கள். இதனால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்றார்.
எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
சென்னையில் அண்மையில் நடந்த "இந்தியா டுடே" கருத்தரங்கில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் "என்டிஏ கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. கூட்டணிக் கட்சிகளும் அவ்வாறு கேட்கவில்லை" என தெரிவித்திருந்தார்.
நயினார் நாகேந்திரன் ஷாக் பேச்சு
அதிமுக தலைமையில் தனித்து ஆட்சி என எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில், கூட்டணி ஆட்சி மற்றும் பாஜக அமைச்சர்கள் என நயினார் நாகேந்திரன் பேசியது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினும், கூட்டணி ஆட்சி இல்லை என காங்கிரஸுக்கு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று அதிமுக மற்றும் பாஜக இடையே தொடங்குகின்றன. ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள இத்தேர்தலையொட்டி, 2024 மக்களவைத் தேர்தலில் பெற்ற 11 சதவீத வாக்குகளின் அடிப்படையில் பாஜக தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பெற திட்டமிட்டுள்ளது.
இந்த முக்கிய சந்திப்பில், பாஜக சார்பில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஒரு குழு பங்கேற்கும். அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அவரது சகாக்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவர்.
கூட்டணியில் யார் யார்
பாஜக, தனக்கும், டிடிவி தினகரனின் அமமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தற்போது இடம்பெற்றுள்ள ஐஜேகே, புதிய நீதி கட்சி, தமமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளுக்கும் சேர்த்து சுமார் 50 சட்டமன்றத் தொகுதிகளைக் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018-இல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அமமுகவைத் தொடங்கியவர் தினகரன். தன்னை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) சேர்த்தது பாஜக என்பதால், அக்கட்சியுடன் மட்டுமே தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு 35 தொகுதிகள்
"பாஜகவுக்கு சுமார் 35 தொகுதிகளும், அ.ம.மு.க. போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கு 15 தொகுதிகளும் வேண்டும் என மொத்தம் 50 தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் செயல்திறனுக்கு ஏற்ப 2026 சட்டமன்றத் தொகுதிப் பங்கீடு அமைய வேண்டும்.
2021 இல் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே 20 தொகுதிகளை ஏற்க நாங்கள் தயாராக இல்லை," என ஒரு மூத்த பாஜக தலைவர் கூறினார்.
30 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் குறைவாகப் பெற பாஜக தயாராக இல்லை என்றும், அவ்வாறு குறைவாகப் பெறுவது தொண்டர்களின் மன உறுதியைக் குறைக்கும் என்றும் அதிமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பாஜக தலைவர் குறிப்பிட்டார்.
அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள்
அ.ம.மு.க.வும் 8-க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிட முடியாது என்பதில் உறுதியாக உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்கள் பதவிகளை இழந்த குறைந்தது எட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் உள்ளனர் எனக் காரணம் கூறப்பட்டுள்ளது.
"அதனால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 40-50 தொகுதிகள் வேண்டும் என்கிறோம்," என்று அந்தத் தலைவர் தெரிவித்தார்.
25 தொகுதிகள்தான்
இருப்பினும், அதிமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அதிகபட்சமாக பாஜகவுக்கு 25 தொகுதிகளையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு 10 தொகுதிகளையும் மட்டுமே ஒதுக்க முடியும் என்று அதிமுக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. குறைந்தது 170 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட அதிமுக தெளிவாக உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பா.ம.க.) 17 அல்லது 18 தொகுதிகளுடன், அதன் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டையும் அதிமுக உறுதியளித்துள்ளது. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு தனது ஒதுக்கீட்டில் இருந்து தொகுதிகளை வழங்கும்.
170 தொகுதிகள்
"நாங்கள் சுமார் 170 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். பாஜகவின் 50 தொகுதிகள் கோரிக்கை மிகவும் அதிகம் என்பதால், அதனை ஏற்க முடியாது. பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரும் ஒரு இணக்கமான எண்ணில் முடிவை எட்டுவார்கள் என நம்புகிறோம்," என ஒரு மூத்த அதிமுக தலைவர் தெரிவித்தார்.
மார்ச் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை வருகைக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளுடனான இறுதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications