தமிழக பாஜகவின் 10-வது தலைவராக நயினார் நாகேந்திரன்..முதல் மாநில தலைவர் யார் தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!
சென்னை: தமிழக பாஜகவின் 10-வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தந்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இன்னும் வளர்ச்சி அடையாத ஒரு கட்சிதான். மத்தியில் தொடர்ந்து பாஜக ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டில் வலுவாக காலூன்றுவதற்காக பகீரத பிரயத்தனங்களை செய்து கொண்டிருக்கிறது.

தற்போது திராவிடக் கட்சியான அதிமுகவில் இருந்து 8 ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி தாவிய நயினார் நாகேந்திரனை, மாநிலத் தலைவராக நியமிக்கிறது பாஜக. தமிழக பாஜகவில் 9-வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
சரி இதுவரையில் இருந்த தமிழ்நாடு பாஜக தலைவர்கள் யார்?
பாஜக என்பது 1980களில் தொடங்கப்பட்டது. அப்போது அதன் முதல் தலைவராக இருந்தவர் பெயர் கே. நாராயண் ராவ். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை தங்களுக்கு தொடர்பே இல்லாத கட்சியாக தொடக்க காலத்தில் ஒதுக்கி வைத்திருந்தனர். அப்போது, ஆந்திராவைச் சேர்ந்த நாராயண் ராவ்தான், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் 1984-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக இருந்தார்.
கே.நாராயண் ராவைத் தொடர்ந்து
- கே.நாராயண் ராவ்
- கே.என். லட்சுமணன்
- சி.பி. ராதாகிருஷ்ணன்
- டாக்டர் கிருபாநிதி
- இல. கணேசன்
- பொன். ராதாகிருஷ்ணன்
- டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
- எல். முருகன்
- கு. அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர்கள் சிலர் இருமுறை பதவி வகித்ததால் 13-வது தலைவர் நயினார் நாகேந்திரன் எனவும் கூறலாம்.
தமிழ்நாடு பாஜக தலைவர்களும் ஆளுநர்களும்
தமிழ்நாட்டு பாஜக தலைவர்களாக பதவி வகித்த சிபி ராதாகிருஷ்ணன், இல. கணேசன் தற்போதும் ஆளுநர்களாக பதவி வகிக்கின்றனர். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனும் ஆளுநர் பதவி வகித்தார். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர்களும் மத்திய அமைச்சர் பதவிகளும்
தமிழ்நாடு பாஜக தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தார். அதேபோல தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், தற்போதும் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!










Click it and Unblock the Notifications