24 மணி நேரத்தில்.. தமிழக அரசியலே அதிருதே.. அண்ணாமலை போட்ட மீட்டிங்.. டெல்லி போன நயினார்.. ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்பு நடந்த 24 மணி நேரத்திற்குள் தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு அவசரமாக பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கே பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார்.
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. முக்கியமாக அதிமுக, பாஜகவில் அடுத்தடுத்து களேபரங்கள் நடந்து வருகின்றன.

டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பில் பல முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.
ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களும் பரபரப்புக்கும் வித்திட்டுள்ளது. உண்மையில் கூட்டணி பற்றிதான் பேசப்பட்டதா.. அல்லது அண்ணாமலை வேறு ஏதாவது முயற்சிகளை செய்கிறாரா என்று விவாதங்கள் எழுந்தது.
நயினார் நாகேந்திரன் டெல்லி
இந்த சந்திப்பு நடந்த 24 மணி நேரத்திற்குள் தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு அவசரமாக பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கே பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார்.
அண்ணாமலையின் இந்த சந்திப்பு கவனம் பெற்ற நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார். அங்கு அவர் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்துப் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை நயினார் சந்தித்தபோது பல முக்கிய விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது. முக்கியமாக அண்ணாமலை - தினகரன் சந்திப்பு பற்றியும், அது தொண்டர்களிடையே ஏற்படுத்திய சலசலப்பு பற்றியும் பேசியதாக கூறப்படுகிறது.
அண்ணாமலையின் நகர்வுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களுடன் நயினார் திரும்புவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றன.
நேரம் கொடுக்காத அமித் ஷா
அவர் அமித் ஷாவை சந்திக்கலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், நட்டாவுடன் இந்த ஆலோசனையை நடத்தினார். அமித் ஷா.. நயினாரை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தொடர்பாக நயினார் பேசுகையில், அக்டோபர் 12ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மக்கள் சந்திப்பு எனும் சுற்றுப் பயணத்தை நடத்தவுள்ளோம். மதுரையில் இருந்து இந்தச் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறோம். அதில் பாஜக தேசிய தலைவரான ஜே.பி. நட்டா கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவருக்கு அழைப்பு கொடுக்கவே வந்தேன். அவரும் முடிந்தவரை வருகிறேன் என்றே உறுதியளித்துள்ளார், என்று கூறினார்.
ஆனால் உண்மையில் இதில் அண்ணாமலை பற்றியும், பாஜக கூட்டணி உடைந்தது பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க வேண்டும், கட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற பல விஷயங்களை நயினார் நட்டாவிடம் பேசியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications