தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா?
சென்னை: "நான் தான் உங்கள் தாய்மாமன் என சென்டிமென்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைகளுக்கு ஜோசப் விஜய் அவர்கள் தூண்டில் போட்டாரோ, அந்தக் குழந்தைகள் தினசரி ஒரு பாலியல் மிருகத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை முதல்வர் விஜய் வேடிக்கை பார்ப்பது மலினமான குணாதிசயம்" என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சி மட்டும் தான் மாறியுள்ளதே தவிர, அவலங்கள் அப்படியே தான் தொடர்கின்றன! கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய கோவை சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையின் ரணம் ஆறும் முன்னே, மீண்டும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைந்து இக்கொடூரத்தை கடந்து வர நாம் அனைவரும் துணை நிற்போம்.

தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை ஜோசப் விஜய் அவர்கள் தூண்டி விட்டாரோ, நான் தான் உங்கள் தாய்மாமன் என சென்டிமென்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைகளுக்கு ஜோசப் விஜய் அவர்கள் தூண்டில் போட்டாரோ, அந்தக் குழந்தைகள் தான் தினசரி ஒரு பாலியல் மிருகத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை அவர் வேடிக்கை பார்ப்பது மலினமான குணாதிசயம்.
இவ்வாறு தனது ஆட்சியில் நடக்கும் எந்தப் பிரச்சினைகளையும் கண்டு கொள்ளாமல், "மற்றொரு பொம்மை" போல முதல்வர் அரியணையில் அமர்ந்திருக்கும் ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், "நேற்று நள்ளிரவு வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இன்று எங்கே கொலை நடந்துள்ளது எந்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்ற அச்சத்திலேயே பொழுது விடிவது தான் தவெகவின் மாற்று அரசியலா? தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்கள் நிர்வாகத்தின் அடிப்படையைக் கற்றுக்கொள்ள இன்னும் எத்தனை உயிர்களைக் காவு கொடுக்க வேண்டும்?
தேர்தலின் போது திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடந்த சட்டம் ஒழுங்கைப் பற்றி கடுமையாக விமர்சித்த ஜோசப் விஜய் அவர்கள், தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலில் அதைத் தானே சரி செய்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு ஊரில் உள்ள குற்றவாளிகளை எல்லாம் தேடித்தேடி அமைச்சராக்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?" என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்?












Click it and Unblock the Notifications