"வேலையை" காட்டும் பாஜக.. மாற்றி மாற்றி குழப்பி அடிக்கம் தலைகள்.. எரிச்சலில் திமுக.. என்னாச்சு?
நயினார் நாகேந்திரன், விரைவில் தமிழகத்திற்கு தேர்தல் வரலாம் என்கிறார்
சென்னை: தமிழக பாஜக தலைவர்களின் அடுத்தடுத்த பேச்சுக்களும், பேட்டிகளும், திமுக தரப்புக்கு எரிச்சலை தந்து வருகின்றன.. அந்த வகையில், அண்ணாமலையை தொடர்ந்து நயினார் நாகேந்திரனும் இன்றைய தினம் திமுகவை சீண்டி பேட்டி தந்துள்ளார்,.
மாதம் ஒரு மாஜியை குறி வைத்து திமுக அரசு ரெய்டுகளை கையில் எடுக்கவும், திடீரென ஆளும் கட்சி மீதான விமர்சனங்களை அதிமுக மொத்தமாக குறைத்து கொண்டுவிட்டது..
போதாக்குறைக்கு, சொந்த கட்சியிலேயே அதிருப்திகள், பூசல்கள் வெடிக்கவும், திமுக மீதான கவனமும் குறைந்துவிட்டது.. இதைதான் தமிழக பாஜக, சரியாக பயன்படுத்தி கொண்டு அரசியல் செய்து வருகிறது.

நோட்புக்
அதிமுக செய்ய வேண்டிய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை இன்றுவரை தொடர்ந்து வருவதுடன், நாங்கள்தான் எதிர்க்கட்சி என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்லி கொண்டிருக்கிறது... மேலும், திமுகவின் ஊழல் புகார்களை பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவோம், இனி மாதந்தோறும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவோம், அனைத்து புகார்களையும் ஒரு நோட்புக்காக தயாரித்து, அதை ஆளுநரிடம் தரப்போகிறோம் மாநில தலைவர் செய்தியாளர்களிடம் பலமுறை சொன்னார்.

லிஸ்ட் ரெடி
ஆனால், நேற்று முன்தினம், "இப்போதுள்ள சூழலில், ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கலைந்துவிடும், அதனால் 4 வருஷம் பொறுமையாக இருப்போம்" என்று அண்ணாமலை கூறியிருந்தார்.. இந்த பேச்சு திமுகவினரின் கவனத்தை ஈர்த்தது.. காரணம், "பொதுத்தேர்தலுடன் சேர்ந்து விரைவில் சட்டமன்ற தேர்தலும் வரலாம், இந்த ஆட்சி நிலைக்காது, நீடிக்காது, எல்லாரும் வீட்டுக்கு போக வேண்டியதுதான்" என்று சொல்லிவந்த நிலையில், 4 வருஷம் பொறுமையாக இருப்போம் என்று சொன்னது, பின்வாங்கலாகவே பார்க்கப்பட்டது.

கவிழுமா ஆட்சி?
அதேபோல, மாதமாதம் எந்த திமுக அமைச்சரின் பட்டியலை அண்ணாமலை வெளியிடப்போகிறார் என்ற கலக்கத்தில் திமுக தரப்பில் இத்தனை நாட்களும் இருந்த நிலையில், "லிஸ்ட் வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும்" என்று அண்ணாமலை கூறியிருந்ததும் கவனத்தை ஈர்த்தது.. இதனால் திமுக தரப்பில் நிம்மதி பெருமூச்சு ஏற்பட துவங்கியது.. இப்படிப்பட்ட சூழலில், மறுபடியும் திமுகவுக்கு ஜெர்க் தந்துள்ளது பாஜக.. இன்று திமுகவின் மின்கட்டண உயர்வை கண்டித்து, பாஜக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தது..

நயினார் ஒரே போடு
அந்த வகையில், தக்கலையில், பாஜகவின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.. அப்போது பேசிய அவர், "திமுக அரசு, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சொன்ன மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்றதை இதுவரை தரவில்லை.. நல்ல திட்டமான பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தையும் நிறுத்திட்டாங்க.. மக்களை ஏமாற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது.. இன்னும் 2 வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபிறகு, மகாராஷ்டிரா போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம்" என்றார்.

எரிச்சல்
4 வருஷம் பொறுமையாக இருப்போம் என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில், மீண்டும் தேர்தல் வரப்போகிறது சீண்டி நயினார் பேசியுள்ளது திமுகவுக்கு எரிச்சலை தந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, மாதமாதம் வெளியிடுவதாக சொன்ன ஊழல் புகார்களை ஏன் அண்ணாமலை வெளியிடவில்லை? எதற்காக மீடியாவில் பலமுறை சொன்னார்? இப்படி பின்வாங்கிவிட்டால், பாஜக மீதான நம்பகத்தன்மையை அது குறைத்து விடாதா? திமுகவை கேள்வி கேட்டு வருவதே பாஜக தான் என்ற தோற்றம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக சொன்னதை செய்ய தவறியது, கட்சிக்கு அவப்பெயரை பெற்று தந்துவிடும் என்கிறார்கள் பாஜகவை சேர்ந்தவர்களே..

கிண்டல் - விசிக
இப்படி மாற்றி மாற்றி குழப்புவதும் பாஜகவின் அரசியலில் ஒன்றுதான், அந்த வேலையை இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இதைதான் நேற்றைய தினம் விசிக வன்னியரசு ஒரு ட்வீ ட் போட்டு கிண்டல் செய்திருந்தார்.. "திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார் அண்ணாமலை.. இதுவரை அதற்கான ஆதாரங்களை கூட வெளியிடவில்லை. இப்போது உளவுத்துறை ஏடிஜிபி திரு.டேவிட்சன் ஆசீர்வாதம் மீது சுமத்துகிறார். இதுவும் அமைச்சர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு போல ஆதாரமில்லாதது தானா?" என்று கேட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Recommended Video

கிண்டல் - விசிக
"இப்படி மாற்றி மாற்றி குழப்புவதும் பாஜகவின் அரசியலில் ஒன்றுதான், அந்த வேலையை இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இதைதான் நேற்றைய தினம் விசிக வன்னியரசு ஒரு ட்வீ ட் போட்டு கிண்டல் செய்திருந்தார்.. "திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார் அண்ணாமலை.. இதுவரை அதற்கான ஆதாரங்களை கூட வெளியிடவில்லை. இப்போது உளவுத்துறை ஏடிஜிபி திரு.டேவிட்சன் ஆசீர்வாதம் மீது சுமத்துகிறார். இதுவும் அமைச்சர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு போல ஆதாரமில்லாதது தானா?" என்று கேட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications