நாங்குநேரியில் தமிழிசை.. நெல்லை தொகுதியை மாற்றும் நயினார் நாகேந்திரன்.. பாஜகவில் நடப்பது என்ன?
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இம்முறை நெல்லை தொகுதியில் இருந்து மாறலாமா என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் அல்லது சாத்தூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நயினார் நாகேந்திரன் போட்டியிட ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தமிழக பாஜக தரப்பில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 35 முதல் 40 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இப்போதே பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தங்களுக்கான தொகுதியில் பணிகளை தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் சென்னையின் துறைமுகம் தொகுதியில் வினோஜ் பி செல்வம், வேளச்சேரி தொகுதியில் எஸ்ஜி சூர்யா உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
நாங்குநேரி தொகுதியில் நாடார் சமூக வாக்குகள் அதிகம். அதேபோல் மறைந்த வசந்த குமார் அந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்து 2019 லோக்சபா தேர்தலில் வென்று எம்பியானார். அதேபோல் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே இருந்திருக்கிறது. இந்த நிலையில் தமிழிசை செளந்தரராஜன் நாங்குநேரியில் போட்டியிட முடிவு செய்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மறைந்த வசந்த குமாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் தமிழிசை செளந்தரராஜன். இதுவும் அவர் நாங்குநேரி தொகுதியை தேர்வு செய்ய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பாஜகவுக்காக தமிழிசை செளந்தரராஜன் வெற்றியை பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் நயினார் நாகேந்திரனும் இம்முறை தொகுதி மாறுவதற்கு ஆலோசிப்பதாக தெரிய வந்துள்ளது.
நயினார் நாகேந்திரனுக்கு எப்போதும் ராசி, ஜாதகம், ஜோசியம் உள்ளிட்டவற்றில் அதிக நம்பிக்கை இருக்கும். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது கூட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே நயினார் நாகேந்திரன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதற்கு நல்ல நாள் என்பதால் வேட்பு மனுத்தாக்கல் செய்தேன் என்று விளக்கம் அளித்திருந்தார்.
அதேபோல் பொதுக்கூட்டம், சுற்றுப்பயணம் உள்ளிட்டவற்றையும் நல்ல நாள் பார்த்தே தொடங்குவார். அந்த வகையில் 2001ல் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், 2006ல் அதே தொகுதியில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2011ல் நெல்லையில் வென்று, 2016ல் தோல்வி அடைந்தார். இதையடுத்து 2021ல் மீண்டும் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிடலாமா என்று ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. முதலில் அவரின் தேர்வு நாங்குநேரியாக இருந்த நிலையில், அங்கு தமிழிசை போட்டியிட விருப்பம் தெரிவித்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஸ்ரீவைகுண்டம் அல்லது சாத்தூர் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்கேற்ப நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரனை வீழ்த்த வேண்டும் என்பதில் திமுக தலைமை குறியாக இருக்கிறது. அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ள ஸ்டாலின், நேரடியாக திமுக வேட்பாளரை களமிறக்கலாமா என்ற ஆலோசனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications