முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கேட்கும் நளினி.. சென்னை ஹைகோர்ட்டில் இன்று விசாரணை
முருகனுக்கு நளினி 6 நாட்கள் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்
சென்னை: மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சுமார் 31 வருடங்களாக சிறையில் இருந்துவருகின்றனர்...
இதில், பேரறிவாளனை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட் விடுவித்தது... மீதமுள்ள 6 பேர் விடுதலை எப்போது என்ற கேள்விகள் எழுந்தபடியே உள்ளன.

பரோல் நீட்டிப்பு
இந்த வழக்கில் ஆயுள் கைதியாக இருக்கும் நளினி, பரோலில் உள்ளார்.. நளினிக்கு இதுவரை 4 முறை பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.. தற்போது மீண்டும் 5-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..,. அந்த வகையில், பரோலில் மீண்டும் வெளிவந்துள்ளார் நளினி... முருகன் பரோல் விடுப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 1 ஆம் தேதி (நேற்று) மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், 6ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் விடுதலை தொடர்பாக மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் நளினி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனு தாக்கல்
அதன்படி நேற்றைய தினம், தன்னுடைய கணவர் முருகனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று சென்னை ஹைகோரட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் நளினி.. அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: "ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருக்கிறேன். ஆனால், வேலூர் சிறையில் இருக்கும் எனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை.

அனுமதி
31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி இன்னும் எங்களை விடுதலை செய்யவில்லை.. மருத்துவக் காரணங்களுக்காக எனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி கடந்த மே 26-ம் தேதி நானும், மே 21-ம் தேதி எனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்தோம்.

பரிசீலனை
அந்த மனுக்கள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. அதனால் என்னுடைய கணவர் முருகன் 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று நளினி தனது மனுவில் கோரியிருந்தார்.. நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது.. இதில், மருத்துவ காரணங்களுக்காக முருகனுக்கு பரோலில் செல்ல அனுமதி கிடைக்குமா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications