நல்லக்கண்ணு கிட்ட ஓடோடிய உதயநிதி.. பக்கத்தில் நெருங்கி.. "டிட்டோ" ஸ்டாலினே.. நெகிழும் காம்ரேட்ஸ்
நல்லக்கண்ணுவிடம் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து பெற்றார்
சென்னை: அமைச்சர் உதயநிதியின் ஒவ்வொரு செயல்பாடுகளும், தற்போது உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில், இன்றைய தினம் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்துள்ளதை பூரிப்புடன் சொல்கிறார்கள் தோழர்கள்.
இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே உதயநிதிக்கான அமைச்சர் பதவி பேச்சு ஓடிக்கொண்டுதான் இருந்தது.. ஒவ்வொருமுறையும் அதுகுறித்த செய்திகளும் மீடியாவில் இடம்பிடிப்பதும், பிறகு சத்தமே இல்லாமல் காணாமல் போவதும் தொடர்ந்து கொண்டே வந்தது.
இறுதியாக உதயநிதி அமைச்சராகிவிட்டார்.. ஆனால், உதயநிதி பதவியேற்பதற்கு முதல்நாள், முதல்வரின் இல்லத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது..

தும்மல்
உதயநிதியின் அடுத்தக்கட்ட வளர்ச்சி முதல்வருக்கு சந்தோஷம்தான் என்றாலும், பொறுப்புமிக்க இடமென்பதால் கவலையும் அவரிடம் தொற்றி கொண்டது என்கிறார்கள்.. அதனால்தான், உதயநிதியை தன்னிடம் அழைத்து, "இப்போது நீ தும்மினால்கூட செய்தியாகிவிடும்... அதனால், யாரிடம், எதைப் பேசினாலும் கவனமாக பேச வேண்டும். அரசு விழாவுக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும். சீனியர் அமைச்சர்களிடம் நிறைய அட்வைஸ் கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆலோசனை தந்தாராம்.

சீனியர்கள் ஆசி
மறுநாளே பதவியேற்பு விழா நடந்தது.. அன்றைய தினம் ஆளுநர் மாளிகைக்கு உதயநிதி வந்திருந்தபோதே அவரது ஒவ்வொரு செய்கையும் உற்றுநோக்கப்பட்டது. பதவியேற்பு விழாவுக்கு முன்கூட்டியே எவ வேலு, கேஎன் நேரு, தங்கம் தென்னரசு உட்பட மூத்த தலைவர்கள் வருகை தந்திருந்தனர்.. காரைவிட்டு இறங்கி நடந்து வந்த உதயநிதி, இவர்களை பார்த்ததுமே, திடீரென அவர்களிடம் ஓடிச்சென்றார். மூத்த தலைவர்கள் முன்கூட்டியே வந்திருந்த நிலையில், அவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று தனித்தனியாக வணக்கம் சொல்லி, வாழ்த்துக்களை பெற்றார்...

விஜயகாந்த்
இப்படி சீனியர்களிடம் வாழ்த்து பெறுவது என்பது இது முதல்முறை கிடையாது.. அன்றைய தினம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதுமே, அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து ஆசி பெற்றார் உதயநிதி.. வழக்கமாக கட்சியில் உள்ள சீனியர்களிடம் ஆசியும் வாழ்த்தும் பெறுவது, வாரிசுகளின் இயல்பு என்றாலும், உதயநிதி ஒருபடி மேலே சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.. இன்னும் ஒருபடி மேலே சென்று, விஜயகாந்த் உட்பட எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டுக்கு சென்று, அவர்களிடம் வாழ்த்துக்களையும் ஆசியையும் பெற்றார்.

நல்லகண்ணு
அந்தவகையில், இன்றைய தினமும் உதயநிதி, மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் ஆசி வாங்கி உள்ளார்.. நல்லக்கண்ணு குறித்து எப்போதுமே தன்னுடைய ட்வீட் பக்கத்தில் பதிவிட்டு வருபவர் உதயநிதி.. அன்று தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டு, உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்த நல்லகண்ணுவை, சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்.. கொரோனா பரவல் காரணமாக கட்சியினரை தவிர்த்துவிட்டு, தான் மட்டும் தனியாக சென்று நல்லகண்ணுவிடம் நலம் விசாரித்துவிட்டு வந்தார்.

நல்லக்கண்ணு பாசம்
அப்போது, ஸ்டாலின் உடல்நலம் பற்றி உதயநிதியிடம் கேட்டறிந்த நல்லகண்ணு, கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்ப வசதி உதவியுடன் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் கட்சிப்பணிகளை பற்றியும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.. பதிலுக்கு உதயநிதியும் நல்லக்கண்ணுவின் உடல்நலம் பற்றி கேட்டறிந்ததோடு வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருந்துகொள்ளுமாறு அன்புடன் கோரிக்கை விடுத்திருந்தார்..

டிட்டோ ஸ்டாலின்
வழக்கமாக கட்சி நிர்வாகிகளோ, அல்லது கூட்டணிக் கட்சி தலைவர்களோ, உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களை வீடு தேடிச்சென்று நலம் விசாரிப்பது ஸ்டாலினின் வழக்கம்... அந்த வழக்கத்தைதான் உதயநிதியும் தொடர்ந்து வருகிறார்.. அதேபோல, பெரியவர்களிடம் ஆசி வாங்க நேரில் செல்வார் ஸ்டாலின்.. அன்று, திமுக தலைவராக பொறுப்பேற்றபோதுகூட, நல்லகண்ணுவிடம் சென்று ஆசி வாங்கியிருந்தார்..

நல்லக்கண்ணு
"விடுதலை போராட்ட வீரர்-சாதி ஒழிப்பு போராளி-உழைக்கும் மக்களின் நம்பிக்கை. எந்நாளும் போற்றுதலுக்குரிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா ஆர்.நல்லகண்ணுவின் பிறந்த நாள் இன்று. பொது வாழ்வு-தனிமனித வாழ்வின் இலக்கணமாக திகழும் அய்யா இன்னும் பல ஆண்டுகள் நம்மை வழிநடத்தட்டும். அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான அவரை சந்தித்தது பெருமித தருணங்களில் ஒன்று" என்று உதயநிதி தன்னுடைய ட்விட்டரில் பெருமையுடன் வாழ்த்துக்களை பதிவிட்டதை மறுக்க முடியாது.

நல்லகண்ணு
இன்றும் நல்லகண்ணுவை தேடி சென்று வாழ்த்தை பெற்றுள்ளார் உதயநிதி.. இந்த சந்திப்பின்போது, கம்யூன்ஸ்ட் மூத்த தலைவர்கள் டி.ராஜா, முத்தரசன் போன்றோர் உடன் இருந்தனர்.. திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அரசியலில் முதிர்ச்சியும் பக்குவமும் அடைந்து வருவதாகவும், ஸ்டாலினை போலவே, சீனியர்களுக்கு மதிப்பளித்து வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கம்யூனிஸ்ட் தோழர்கள் பூரித்து சொல்கிறார்கள்..!!!












Click it and Unblock the Notifications