சாதிச்சாக்கடை ஸ்டாலின் - திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் சீமான் தம்பிகள்! என்ன விஷயமாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. நடிகர் சூர்யா, ஜோதிகா படத்தை தயாரித்துள்ளனர். ஞானவேல் இயக்கியுள்ளார். ஒடுக்கப்பட்ட இருளர் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் கதாநாயகன் அவர்களுக்கு நீதி பெற்று தருவதே படத்தின் கதை.

ஜெய்பீம் திரைப்படம் சமூக நீதியை பறைசாற்றுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். இதேபோல் அரசியல் கட்சியினர், திரையுலகினர் உள்ளிட்ட பலர் சூர்யாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவத்து வந்தனர்.

அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

அதே வேளையில் ஜெய்பீம் படத்தில் சர்ச்சையும் எழுந்தது. மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் இடம்பெற்றுள்ள காலண்டர் வைக்கப்பட்டு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்ததது. ஒரு சமூகத்தை உயர்த்தும் நோக்கில் வேறு ஒரு சமூகத்தை தாழ்த்தி படம் எடுக்ககூடாது என்றும் அக்னி கலசம் இடம்பெற்றுள்ளதை நீக்க வேண்டும் என்றும் நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

சீமானுக்கு கண்டனம்

சீமானுக்கு கண்டனம்

இதற்கு பதில் அளித்த நடிகர் சூர்யா ''ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை உணர்த்துவதே ஜெய்பீம் படத்தின் நோக்கம். எந்த சமூகத்தினரையும் அவமதிக்கவில்லை'' என்று கூறினார். ஜெய்பீம் படத்தை பாராட்டி பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''அக்னி கலசம் பாமகவின் குறியீடு என்பது உலகிற்கே தெரியும்.. அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டும்? அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும்? அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். நான் கவனித்திருந்தால் முன்பே அதனை நீக்க சொல்லியிருப்பேன்" என்று கூறி இருந்தார்.

#சாதி சாக்கடை சீமான்

#சாதி சாக்கடை சீமான்

சீமானின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. சீமானுக்கு கடுமையாக கண்டனத்தை பதிவு செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு, '' சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பது தான் #இந்துத்துவக் கட்டமைப்பு. சாதி மீறி திருமணம் செய்தால் படுகொலை செய்கிறது மதவாதம். அதன் பெயரே #ஆணவப்படுகொலை. இதுகூட தெரியாமல் சீமான் உளறிக்கொண்டு இருக்கிறார்'' என்று கூறினார். இதனை தொடர்ந்து சீமானுக்கு எதிராக '#சாதி சாக்கடை சீமான்' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலானது.

நாம் தமிழர் பதிலடி

நாம் தமிழர் பதிலடி

''திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்தபோது குரல் எழுப்பாத சீமான் என அக்னிகலசத்துக்கு மட்டும் பொங்குவது ஏன்'' என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். சீமானுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். தி.மு.க.வினர் பலரும் சீமானை கிண்டல் செய்து பதிவிட்டனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் திமுகவுக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளனர்.

#சாதிசாக்கடை ஸ்டாலின்

#சாதிசாக்கடை ஸ்டாலின்

அதாவது பெரம்பலூர் ரெட்டி நலச்சங்கம் சார்பில் கடந்த முப்பெரும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கே.என்.நேரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக குறிப்பிட்ட அழைப்பிதழையும், ''நாயுடு சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் ஏ.வ.வேலு, கு.பிச்சாண்டி, பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி ஆகியோரை அமைச்சர்களாக நியமித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்ததற்கு நன்றி'' என்று 'நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் வெளியிட்ட போஸ்டரையும் டுவிட்டரில் வெளியிட்டு திமுகவை கிண்டல் செய்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். #சாதிசாக்கடை ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நாம் தமிழர் கட்சியினர் திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+