இந்தாங்க சார் என் குடும்பத்தின் மீதான ரூ 2.63 லட்சம் கடனுக்கான காசோலை.. நாமக்கல்லில் சுவாரஸ்யம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்தினர் மீது ரூ 2.63 லட்சம் கடன் சுமத்தியதை வெள்ளை அறிக்கை மூலம் அறிந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அந்த கடனை அடைக்க காசோலையை கொண்டு வந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

அதிமுக ஆட்சியின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதில் தமிழக அரசுக்கு ரூ 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாக வெளியானது. அது போல் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை இருப்பதாகவும் பிடிஆர் தெரிவித்திருந்தார்.

நாமக்கல் கோட்டாட்சியர்

நாமக்கல் கோட்டாட்சியர்

இதைத் தொடர்ந்து நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த காந்தியவாதி இளைஞர் ரமேஷ் தியாகராஜன். இவர் 2.63 லட்சம் கடன் தொகைக்குரிய காசோலை அட்கிய அட்டையை தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்தார்.

காந்தி வேடம் அணிந்த இளைஞர்

காந்தி வேடம் அணிந்த இளைஞர்

அங்கு கோட்டாட்சியர் மு கோட்டை குமார், அந்த இளைஞர் வழங்கிய காசோலை அட்டையை வாங்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் சென்றார். அங்கும் ஆட்சியர் இவரது காசோலை அட்டையை வாங்க மறுத்துவிட்டார். இவர் எல்லா அலுவலகங்களுக்கும் காந்தி வேடம் அணிந்து கொண்டு வந்திருந்தார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

2006-2011 ஆம் ஆண்டில் இருந்த உபரி வருமானம் தற்போது சரிந்து விட்டது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். கடைசி 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை என்றும், அதனால், ஏற்பட்ட 3 லட்சம் கோடி பொதுக் கடனில், சரிபாதி தினச் செலவு என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

வருமானம் சரியவில்லை

வருமானம் சரியவில்லை

எந்த மாநிலத்திலும் கடைசி 5 ஆண்டில் இந்த அளவுக்கு வருமானம் சரிய வில்லை. கொரோனா பாதிப்பால் மட்டுமே இது ஏற்படவில்லை. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வருமானம் சரிந்துள்ளதையும் பிடிஆர் தெரிவித்திருந்தார். ஒட்டுமொத்தமாக கடன் 5 லட்சத்து எழுபதாயிரத்து 186 கோடி ரூபாய் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+