பூராம் நாங்க கழற்றி வீசிய "ஓட்டை டயர்கள்".. அதை எடுத்து திமுக மாட்டியிருக்கு.. போட்டுதாக்கிய "அம்மா"
நமது அம்மா திமுகவை சரமாரி விமர்சித்துள்ளது
சென்னை: "அதிமுக கழற்றி வீசிய ஓட்டை டயர்களை, திமுக என்ற வாகனம் எடுத்து மாட்டிக் கொண்டது" என்ற நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரை பல தரப்பிலும் விவாதத்தை கிளப்பி உள்ளது.. அப்படியானால், "திமுகவில் யாருமே ஆக்டிவ் ஆக இல்லையா.. கட்சி தாவி வந்தவர்களுக்கு அடைக்கலம் தந்து கொண்டிருப்பது எல்லாம் சரிதானா? என்ற முணுமுணுப்புகளும் எழுந்துள்ளன.
நேற்று நமது அம்மா ஒரு சர்ச்சையான கட்டுரையை வெளியிட்டது.. "கழகத்திற்கு துரோகம் செய்து விட்டு திமுகவில் அடைக்கலம் ஆனவர்களுக்கு பதவிகள் கொடுத்து உயர்த்திப் பிடிக்கின்றனர்.
அதிமுக தொண்டர்களின் அயராத உழைப்பை மூலதனமாக்கி அரசியல் அடையாளம் பெற்று விட்டு திமுகவிற்கு ஓடிப் போனவர்கள், இவர்கள் அனைவரும் அதிமுக கழற்றி வீசிய ஓட்டை டயர்கள்.
இதனை திமுக என்ற வாகனம் எடுத்து மாட்டிக் கொண்டது. இவர்களின் தயவால் தான் அந்த வண்டியே ஓடிக் கொண்டிருக்கிறது" என்று விமர்சித்திருந்தது.. மேலும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த சிலரது பெயர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் குறித்தும் தெரிவித்திருந்தது.

சர்ச்சை கட்டுரை
இதுதான் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.. வழக்கமாக அதிமுக, திமுகவை விமர்சனம் செய்யும் போக்கு இது என்று எடுத்து கொண்டாலும், உண்மையிலேயே திமுகவும் அப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது.. இதை பற்றின கருத்தை ஒருசில அரசியல் நோக்கர்களிடம் முன்வைத்து பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

விமர்சனம்
"இந்த கட்டுரை எந்த நோக்கத்தில் எழுதப்பட்டது என்று தெரியவில்லை.. ஆனால், இது இன்று, நேற்றல்ல.. எப்போதுமே கட்சி மாறி வந்தவர்களை கவுரவிப்பது என்பது ஜெயலலிதாவும் செய்திருக்கிறார்.. எத்தனையோ முறை திமுகவில் இருந்து வந்தவர்களை அவர் உயர்த்தி அழகு பார்த்துள்ளார்.. இதுபோலவே கலைஞரும் செய்திருக்கிறார்.

பொறுப்பு
நம்பி வந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வரை தாராளமாக வழங்கி இருக்கிறார்கள். அதேசமயம், அமைச்சர் பொறுப்பு போன்ற அதிகாரத்தை செலுத்தக்கூடிய மிக முக்கிய பொறுப்பு இவர்களுக்கு தந்திருக்கிறார்களா என்றால், அது குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.. அதிகபட்சம் மாவட்ட செயலாளர் பதவிதான்.

சேகர்பாபு
இப்படித்தான் திமுகவும் தற்போது செய்து வருகிறது.. சேகர் பாபு, செந்தில் பாலாஜி, செல்வ கணபதி என்று பலர் இன்றைக்கு உதாரணமாக இருக்கிறார்கள்.. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.. முதலில், மாற்று கட்சியில் இருந்து இவர்கள் எல்லாம் இங்கு ஏன் தாவி வருகிறார்கள்? அப்படியென்றால் அந்த கட்சியில் என்ன பிரச்சனை இருக்கிறது?

பாசிட்டிவ்
இரண்டாவதாக, திமுகவுக்கு சென்றால் நிச்சயம் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் வருகிறார்கள்.. அதன்படியே பொறுப்பு கொடுத்ததும், அந்த பொறுப்பை சிறப்பாகவே செய்து முடிக்கிறார்கள்.. மூன்றாவதாக, பிற கட்சியினருக்கு பொறுப்பும், கவுரவமும் தருவதை பார்த்தாவது, சொந்த கட்சி நிர்வாகிகள் இனியாவது சுறுசுறுப்பாக களவேலை பார்ப்பார்கள் என்ற மறைமுக நம்பிக்கையையும் இது ஊட்டுவதாகவே உள்ளது.. அதனால், இதை ஏன் விமர்சிக்க வேண்டும்.. பாசிடிவ் முறையிலேயே அணுகலாமே.

விபி துரைசாமி
அப்படி பார்த்தால், குக செல்வம், விபி துரைசாமியை விமர்சிக்க இவர்கள் தயாரா? அதிமுக கழற்றி வீசிய ஓட்டை டயர்களை இதனை திமுக என்ற வாகனம் எடுத்து மாட்டிக் கொண்டது என்று சொல்கிறார்களே? அதிமுகவே திமுகவில் இருந்து கழண்டு வந்த டயர்தானே? இது ஏன் இவர்களுக்கு புரிவதில்லை" என்றனர்!
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications