ஊட்டியில் அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு செக்.. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: ஊட்டியில் உரிமம் பெற்று செயல்படும் விடுதிகள், ரிசார்ட்கள் குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளிடம் சட்டவிரோதமாக 30,000 முதல் 40,000 ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த இ - பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும் இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சதிஷ்குமார், பரதசக்கரவர்த்தி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி, இ பாஸ் பெற விண்ணப்பிப்பவர்களிடம் எப்போது வருகிறார்கள், எங்கு தங்க இருக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்குவார்கள் என்ற விவரங்களை பெறும் வகையில், விண்ணப்பத்தில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரசுத தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தவறான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, முழுமையான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஊட்டியில் உள்ள உரிமம் பெற்ற விடுதிகள், ரிசார்ட்கள் குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளிடம் சட்டவிரோதமாக 30,000 முதல் 40,000 ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்த உத்தரவினை பிறப்பித்தனர். மேலும், அடுத்த விசாரணையின் போது காணொலி காட்சி மூலம் ஆஜராகும்படி, நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications