மதிமுகவுக்கு ரிட்டர்ன் ஆகிறாரா? போராட்ட களத்தில் துரை வைகோவுக்கு துணையாக நிற்பேன்-நாஞ்சில் சம்பத்
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ரக் கழகத்தின் போராட்ட களத்தில் அக்கட்சியின் தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள துரை வைகோவுக்கு துணையாக நிற்பேன் என்று நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார். இதன் மூலம் மதிமுகவுக்கு மீண்டும் திரும்ப இருப்பதை நாஞ்சில் சம்பத் உறுதி செய்துள்ளார்.
திராவிடர் இயக்க முன்னணி பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத், வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது தாமும் வெளியேறினார். மதிமுகவில் வைகோவின் வலது கரமாக திகழ்ந்தார். மதிமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார் நாஞ்சில் சம்பத்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்தார். வழக்குகளை எதிர்கொண்டார். ஒருகட்டத்தில் வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் கொள்கை பரப்பு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

அரசியலுக்கு குட்பை
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளராக செயல்பட்டார். ஆனால் தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போது திராவிடமும் இல்லை; அண்ணாவும் இல்லை; ஆகையால் அந்த கட்சியில் இருக்க முடியாது என அறிவித்தார். அத்துடன் இனி அரசியலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழுமையாக இலக்கிய கூட்டங்களில் கவனம் செலுத்துவேன் எனவும் அறிவித்தார் நாஞ்சில் சம்பத்.

திமுக ஆதரவு
ஆனால் திமுகவின் ஆதரவாளராக, திராவிடர் இயக்க அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வந்தார் நாஞ்சில் சம்பத். இதனால் அவர் திமுகவில் மீண்டும் இணையக் கூடும் என்ற கருத்தும் நிலவி வந்தது. ஆனால் தாம் அரசியல் கட்சிகளில் இணையப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக கூறினார் நாஞ்சில் சம்பத். அதே நேரத்தில் திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட பொய் பெட்டி என்ற நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், ஒரு புதிய அத்தியாயத்தை தம்பி உதயநிதி படைப்பார் என்றால், அவருக்கு ஏணியாகவும் இருப்பேன், தோனியாகவும் இருப்பேன் என்றார். அந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்துக்கு திமுக கரைவேட்டியை பொன்னாடையாக போர்த்தினார் உதயநிதி.

வைகோ மகனுக்கு பதவி
இந்நிலையில் மதிமுகவின் தலைமை கழக செயலாளராக வைகோ மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மதிமுக மாவட்ட செயலாளர்கள், உயர்நிலை குழு கூட்டத்தில் வைகோ ரகசிய வாக்கெடுப்பு நடத்தினார். அதேநேரத்தில் திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, மகனுக்கு கட்சியில் பதவி கொடுத்திருக்கிறார் என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டும் வருகிறது. மதிமுகவிலேயே சில மூத்த தலைவர்கள் வைகோ மகன் துரை வைகோவுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

நாஞ்சில் சம்பத் ஆதரவு- மீண்டும் மதிமுகவில்?
தற்போது மதிமுகவுக்கு ஆதரவாகவும் வைகோ மகன் துரை வைகோவுக்கு பதவி கொடுத்ததை நியாயப்படுத்தியும் நாஞ்சில் சம்பத் பேசி வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத், வைகோ திமுகவில் இருந்து வாரிசு அரசியலால் வெளியேறவில்லை. அது ஒரு வரலாற்று அரசியல். மதிமுக பூகம்ப வேகத்தைவிட வேகமாக செயல்படக் கூடிய இயக்கம். அது போராடப் பிறந்தது. மதிமுகவின் போராட்ட களத்தில் தம்பி துரை வைகோவுக்கு இந்த நாஞ்சில் சம்பத் துணையாக நிற்பேன் எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் மீண்டும் மதிமுகவுக்கு நாஞ்சில் சம்பத் திரும்பலாம் என்பதை அவர் உறுதி செய்திருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications