நெகிழ வைத்த நெப்போலியன்.. மாற்றுத்திறனாளி பாடகிக்கு அமெரிக்காவில் கொடுத்த இன்ப அதிர்ச்சி
சென்னை: தேசிய விருது வென்ற மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் ஏழு ஆண்டு ஆசையை நடிகர் நெப்போலியன் நிறைவேற்றி உள்ளார். இதனை பாடகி ஜோதியே நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பிரபல தமிழ் நடிகரான நெப்போலியன் பல படங்களில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அவருக்கு பல படங்களை அடையாளமாக கூறினாலும், சீவலப்பேரிபாண்டியும், எட்டுப்பட்டி ராசாவும் அவருக்கு மணிமகுடமாக அமைந்த படங்கள் ஆகும். சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்துள்ள நெப்போலியன், நிஜவாழ்க்கையில் பலருக்கும் ரோல் மாடல் என்று சொல்லும் அளவிற்கு பல உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.

ஒரு காலத்தில் எம்பியாகி மத்திய அமைச்சராகவும் இருந்தார். அதன்பினனர் மகனுக்காக சினிமா அரசியல் என இரண்டையும் விட்டு விட்டு அமெரிக்காவிற்கு சென்று குடும்பத்தோடு செட்டில் ஆகி விட்டார். நெப்போலியன் ஜேயசுதா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள.
இதில் மூத்த மகன் தனுஷ்க்கு நான்கு வயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். மகனை காப்பாற்ற அவர் போகாத மருத்துவமனைகளே இல்லை.. ஒரு நாள் திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஊரில் பாரம்பரிய முறையில் இதற்கு மருத்துவம் பார்ப்பது தெரிய வர அங்கு தன்னுடைய மகனை கூட்டி சென்றார்.. பிறகு தன்னுடைய மகனின் உடல்நிலையில் நல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கியதும் தன்னுடைய மகனின் நிலைமை இனி எந்த குழந்தைகளுக்கும் வரக்கூடாது என்று யோசித்தார். அதற்காக அந்த ஊரிலேயே ஒரு பெரிய மருத்துவமனையை நெப்போலியன் கட்டி கொடுத்தார்
ஒரு முறை அமெரிக்கா சென்ற போது, அவரது மகன் தனுஷ்க்கு அங்குள்ள சூழல் பிடித்து போக அங்கேயே இருக்க விரும்பியுள்ளார். இதையடுத்து மகனுக்காக நெப்போலியன் அமெரிக்காவில் போய் செட்டில் ஆனார். நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் வணிகம் செய்து வருகிறார்.
நெப்போலியனின் மகன் தனுஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.. சில தினங்களுக்கு முன்பு அவர் சென்னையில் நேரடியாக வந்த நெப்போலியன் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து அவருக்கு நிச்சயதார்த்த பத்திரிக்கையை கொடுத்துள்ளார். அதுபோல தன்னுடைய மகன் அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்ய போகிறார் என்றும் கூறினார்.
நெப்போலியன் சென்னை வந்த பின்னர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது நண்பரான விஜயகாந்த் வீட்டிற்கு தன்னுடைய மனைவியுடன் சென்றார். அங்கு விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விஜயகாந்த்துடன் மலரும் நினைவுகளில் மூழ்கியவர், அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து குடும்பத்தினரிடம் கண்கலங்கியபடி பேசினார். தற்போது சென்னையில் இருக்கும் அவர் பல்வேறு நண்பர்களை சந்தித்து பேசிவருகிறார்.
இதனிடையே சென்னை வந்துள்ள நெப்போலியன், தேசிய விருது வென்ற மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் ஏழு ஆண்டு ஆசையை நிறைவேற்றியுள்ளார். அமெரிக்கா செல்ல வேண்டும் என 7 ஆண்டுகளாக ஏங்கிய அவரின் கனவு நடிகர் நெப்போலியன் மூலம் நனவாகி உள்ளதாக பாடகி ஜோதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி நெப்போலியனிடம் வீடியோ காலில் பேசிய மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதி, என்னை உங்கள் குடும்பத்தினர் அமெரிக்காவில் நன்றாக பார்த்துக் கொண்டனர். உங்கள் அன்புக்கு நன்றி. கண்டிப்பாக வருவேன் அங்கிள். தனுஷ் அண்ணா எப்படி இருக்கார் என்றார். அப்போது நெப்போலியன், நன்றாக இருக்கிறார். நான் சென்னையில் இருக்கிறேன். நீ நல்லா பெர்ம்பாம் பண்ணுணயா என்று கேட்டார்.
அதற்கு ஜோதி நல்லா பெர்ம்பாம் பண்ணுனேன். என்னை கிருத்திகா ஆண்டி சாப்பாடு போட்டு நல்லா பார்த்துக் கொண்டார்கள்.. நார்த் கரோலினாவில் வெள்ளிக்கிழமை காலையில் பிளைட் அங்கிள்... செப்டம்பர் வரை அமெரிக்காவில் தான் அங்கிள் இருப்பேன். செப்டம்பர் 11ம் தேதி கிளம்புகிறேன் என்றார்.
அதற்கு நெப்போலியன் இந்த மாதக்கடைசியில் அமெரிக்கா வந்துவிடுவேன்.. ஆகஸ்ட் மாதம் நாம் சந்திப்போம் என்றார். அதற்கு அந்த பெண், உலகம் முழுவதும் பாட வேண்டும் என்பது என் கனவு.. என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மத்திய அரசு வழங்கும் National Award of persons with disabilities என்ற விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஒரே பாடகியான ஜோதி இசைப்பிரிவில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications