லைம்லைட்டை இழக்கும் அமித் ஷா? நாயுடு பேச்சுக்கு கூடுதல் "மவுசு" தரும் மோடி! டெல்லியில் என்ன நடக்குது

Subscribe to Oneindia Tamil

சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடியும் கூட அமித் ஷாவிற்கு பதிலாக சந்திரபாபு நாயுடுவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.

2024 லோக்சபா தேர்தலில் தனிப்பட்ட வகையில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும் பாஜக தனிப்பட்ட வகையில் மெஜாரிட்டியை இழந்து உள்ளது.543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

lok sabha election 2024 narendra modi bjp 2024

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 40 இடங்களை வைத்து இருக்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார், ஷிண்டே சிவசேனா ஆகியோரின் உதவிதான் மோடி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது

தலைவர் மாற்றம்: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடியும் கூட அமித் ஷாவிற்கு பதிலாக சந்திரபாபு நாயுடுவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.

பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய தலைவர்.

சிவராஜ் சிங் சவுகான் இந்த லோக்சபா தேர்தலில் ஓரங்கட்டப்பட்டார். மோடி, நட்டா, அமித் ஷா மூலம் பிரச்சாரத்திற்கு கூட கொண்டு வரப்படாமல் ஓரம்கட்டுப்பட்டார். முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டு வீட்டில் அமர வைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் அழுத்தம் காரணமாக தற்போது சிவராஜ் சிங் சவுகான் ஆக்டிவ் அரசியலுக்குள் மீண்டும் நுழைந்து உள்ளார்.

அமித் ஷா மவுசு : அதேபோல் அமித் ஷாவிற்கு தேசிய அளவில் இனி மவுசு குறையும். அவர் ஏதாவது மாநிலத்தில் முதல்வராக்கப்படலாம். சிவராஜ் சிங் சவுகான் வந்தால் அமித் ஷா அவரின் முடிவில் தலையிட முடியாது.

சிவராஜ் சிங் சவுகான்தான் முடிவுகளை எடுப்பார். அதோடு மோடி அமித் ஷாம் அதிகம் அணுகுவதில்லை. அவர் சந்திரபாபு நாயுடுவின் முடிவுகளை கேட்கிறார். சந்திரபாபு நாயுடுவின் பேச்சையே அதிகம் கேட்கிறார். அவரின் பேச்சே கூடுதல் மவுசு தருகிறார்.

அவரின் ஆதரவு இல்லை என்றால் பாஜக ஆட்சி அமைக்க முடியாது. அடுத்த 5 வருடம் இவர்கள் சொல்வதையே கேட்க வேண்டும். இல்லையென்றால் ஆட்சி கவிழ்ந்து விடும். அதனால் அவரின் பேச்சையே மோடி அதிகம் கேட்கிறார்.

தோல்வி காரணமாக அமித் ஷா மீது அவர் அப்செட்டில் இருக்கிறார். இதனால் மித் ஷாவிற்கு தேசிய அளவில் இனி மவுசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+