தமிழ்நாட்டில் தான் வெப்பம் ரொம்ப அதிகம்! தென்னிந்தியாவிலேயே நாம் தான் மோசம்... நாசாவின் ஹீட் மேப்
சென்னை: உலகில் நிலவும் வெப்பத்தின் அளவு குறித்து நாசா வெளியிட்டுள்ள சாட்டிலைட் படத்தில் முக்கிய விஷயம் தெரிய வந்துள்ளது.
உலக வெப்ப மயமாதல் தான் சர்வதேச நாடுகள் இப்போது சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதனால் பூமியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக உலக வெப்ப மயமாதல் காரணமாகப் பருவநிலை மாற்றம் ஏற்படுவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.

வெப்பம்
இதனால் ஏற்படும் பாதிப்புகள் மனிதர்களுக்கு மட்டுமில்லை பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள காடுகளில் காட்டுத் தீயும் ஏற்பட்டு வருகிறது. இதனால் காடுகளில் வசிக்கும் பல அரிய உயிரினங்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இது தொடர்பான ஃபோட்டோக்களும் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

பாதிப்பு
வெயில் ஒரு புறம் என்றால் பருவம் தவறிப் பெய்யும் மழையும் பெரிய சிக்கலாகி உள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளில் விவசாயமும் கூட பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல ஜெர்மனி, சீனா தொடங்கி டெல்லி, மும்பை வரையும் கூட கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் ஏற்படும் வெள்ள பாதிப்பும் மிக மோசமாகவே உள்ளது. இப்படி வெயிலும் மழையும் பூமியை வாட்டி வதைக்கிறது.

பருவம் தவறும் மழை
மனிதர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகத்தை நாசம் செய்து வருவதே இதற்கு முக்கிய காரணம். சமீப ஆண்டுகளாக உலகின் பல நாடுகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை ஏற்படுகிறது. அமெரிக்கா, கனடா நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. சமீபத்தில் ஐரோப்பாவில் இதேபோல வெப்ப அலை ஏற்பட்டதால் உலகெங்கும் பலரும் உயிரிழக்கும் சூழலும் உருவானது.

நாசா
இந்நிலையில், நாசாவின் சுற்றுச்சூழல் அமைப்பு வெப்ப ரேடியோமீட்டர் மூலம் பூமியில் நிலவும் வெப்பம் குறித்த மேப் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பூமியின் பல்வேறு நாடுகளிலும் பதிவான வெப்பத்தின் நிலை பதிவாகி உள்ளது. ஆப்பிரிக்கா, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகளில் நிலவிய வெப்பம் குறித்த தகவல்கள் அதில் இடம் பெற்று உள்ளது.

உலக நாடுகள்
அதில் ஆப்பிரிக்காவில் வடக்குப் புறத்தில் இருக்கும் நாடுகளில் வெப்பம் அதிகமாக உள்ளது. அதேபோல மத்திய கிழக்கு நாடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கடந்த சில நாட்களாக வெளியான தகவல்களை உறுதி செய்வது போலவே ஐரோப்பாவில் பல நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதில் சுவாரசியமான ஒன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வெப்பம் தான்.

இந்தியா
இந்தியாவைப் பொறுத்தவரை வட இந்தியாவில் கிட்தட்ட அனைத்து இடங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. ஆனால், மகாராஷ்டிராவுக்குக் கீழே தென் மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் கணிசமாகக் குறைவாகவே உள்ளது.கர்நாடகா, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகவே உள்ளது. ஆந்திராவின் சில பகுதிகளில் வெப்பம் அதிகமாக உள்ளது.

தமிழ்நாடு
இருப்பினும், தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் மாநிலம் முழுவதுமே வெப்பம் மிக அதிகமாகவே உள்ளது. அதாவது தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிகரிக்கும் நகர மயமாக்கல், காடுகளை அழிப்பது. மரங்களை வெட்டுவது போன்ற காரணங்களே தமிழ்நாட்டில் வெப்பம் அதிகமாக இறுக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications