டிசிஎஸ் விவகாரத்தில் பூகம்பம்.. இளம் பெண்கள் நாடு கடத்த சதி.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாசிக் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அலுவலக விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. டிசிஎஸ் பிபிஓ அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் சக பெண் ஊழியர்களை பாலியல் துண்புறத்தல், சீண்டல், மதமாற்ற முயற்சி தொடர்பான வழக்கின் விசாரணை தற்போது பெரும் திருப்பத்தை சந்தித்துள்ளது.

இளம் பெண்களை காதல் பொறியில் வீழ்த்தி மதமாற்றம் செய்து, வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற பெயரில் பெண்களை நாடு கடத்தல் நெட்வொர்க்கில் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் டேனிஷ் ஷேக் பெண்களை நாடு கடத்தல் நெட்வொர்க்கில் தொடர்புடைய முக்கிய நபராக சந்தேகிக்கப்படுகிறார்கள்.

TCS IT Nashik TCS Case Danish Sheikh Trafficking Love Trap Conversion Nashik Human Trafficking TCS Religious Conversion Case Nashik TCS conversion case Danish Sheikh Nashik love trap religious conversion Nashik human trafficking network international women trafficking Nashik TCS office Nashik case Danish Sheikh mobile evidence women cataloged with codes Nashik Nashik court custody extension Nida Aijaz Khan anticipatory bail TCS linked religious conversion human trafficking under job offer Nashik police investigation update forced conversion and trafficking Maharashtra human trafficking case 2026

அவரது மொபைல் போனில் இருந்து பெண்களின் புகைப்படங்கள், சர்வதேச குழுக்கள் மற்றும் ஒவ்வொரு பெண்ணுக்கும் குறியீடு (கோட் நம்பர்) கொடுக்கப்பட்ட பட்டியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு முறையான கடத்தல் நெட்வொர்க்-ன் செயல்பாடுகளாக இருக்கிறது போலீசார் சந்தேகிக்கின்றனர் என ரிபப்ளிக்வேர்ல்டு தனது செய்தியில் தெரிவித்துள்ளகு.

போலீசார் தகவலின்படி, நாசிக் பிபிஓ அலுவலகத்தில் பணியாற்றும் இளம் பெண்களை முதலில் உணர்ச்சி ரீதியாக ஈர்த்து காதல் உறவு ஏற்படுத்தி நம்பிக்கை பெறுவதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களை மதமாற்றம் செய்து, வெளிநாட்டில் அதிகப்படியான சம்பளத்துடன் வேலை என்று ஏமாற்றி சர்வதேச கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போன், லேப்டேப் போன்றவற்றை ஆய்வு செய்ததில் இருந்து கிடைத்த ஆதாரங்கள் இந்த மோசமான செயல்முறையை உறுதிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பிரதான குற்றவாளிகளும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலுக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். புதிய டிஜிட்டல் ஆதாரங்கள் இருப்பதால் மேலும் ஐந்து நாட்கள் காவல் தேவை என்று போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

குற்றவாளிகளின் வழக்கறிஞர் உமேஷ் வால்ஜடே, "இது சதி செய்யப்பட்ட வழக்கு. டேனிஷ் ஷேக்கை தவறாக குற்றம்சாட்டப்படும் முயற்சி நடைபெறுகிறது" என்று கூறினார். மற்றொரு குற்றவாளியான நிதா கான் முன் ஜாமீன் கோரிக்கை மீதான வாதங்கள் நடைபெற்றன. அரசு வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா, "வழக்கு ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும் மிகவும் தீவிரமான குற்றங்கள் சம்பந்தப்பட்டுள்ளன" என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், மதமாற்றம், காதல் பொறி மற்றும் சர்வதேச மனித கடத்தல் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்திருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகி வருகின்றன.

தற்போது போலீசார் நாடு கடத்தல் கோணத்திலும் விசாரிக்க துவங்கியுள்ளனர், இதேபோல் புகார் அளித்த நபர்களிடம் இது தொடர்பான தகவல்களையும் சேகரிக்க துவங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+