நீட் தேர்வு “பெஸ்டு”.. கண்டிப்பா நடத்தனும்! முதலிடம் பிடித்த தமிழ்நாடு மாணவர் பிரபஞ்சன் சர்டிபிகேட்
சென்னை: நீட் தேர்வு சிறந்த தேர்வு என்றும், தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க கட்டாயம் இந்த தேர்வை நடத்த வேண்டும் என தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு மாணவர் பிரபஞ்சன் தெரிவித்து உள்ளார்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று இரவு வெளியாகி இருக்கின்றன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 720க்கு 720 மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் மேல்ஓலக்கூர் கிராமத்தை சேர்ந்த பிரபஞ்சன் சென்னையில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

முதல் முறையாக நீட் தேர்வை எழுதி இந்த சாதனையை அவர் படைத்து உள்ள பிரபஞ்சனின் பெற்றோர் செஞ்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
அவர் பேசுகையில், "என் அப்பா, அம்மா இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். நீட் தேர்வு என்பது ஒரு மிகச்சிறந்த தேர்வு. உண்மையான தகுதியான ஆட்களை மருத்துவப் படிப்புகளுக்கு தேர்வு செய்ய நீட் தேர்வு கட்டாயம் நடக்க வேண்டும். இந்த தேர்வுக்கு கடின உழைப்பு அவசியம். பயிற்சி மிக மிக முக்கியம். இறுதி நாட்களில் நீட் போன்றே இருக்கக்கூடிய GD எனப்படும் கிராண்ட் டெஸ்ட்களை 50 முறைக்கு மேல் எழுதி உள்ளேன்.
அதுபோன்ற தேர்வுகளில் வினாக்களுக்கு பதிலளிக்கும்போதுதான், இதில் வெற்றிபெற முடியும். நான் 10 ஆம் வகுப்பு வரை செஞ்சியில் உள்ள தனியார் பள்ளியில்தான் படித்தேன். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கதான் சென்னைக்கு வந்து உள்ளேன். அனைத்து இந்திய அளவில் நடைபெற இருக்கக்கூடிய கலந்தாய்வுக்குதான் நான் செல்ல உள்ளேன்.
கல்லூரி என்றால் எய்ம்ஸ் அல்லது ஜிப்மர்தான். இன்னும் முடிவெடுக்கவில்லை. மருத்துவ மேற்படிப்பை பொறுத்தவரை அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதே என்னுடைய கனவு. சூப்பர் ஸ்பெஷாலிட்டியை பொறுத்தவரை எம்பிபிஎஸ் படிக்கும்போது எனக்கு என்ன விருப்பமாக இருக்கிறதோ அதை முடிவு செய்வேன்.
தேர்வு முடிவுகள் தொடர்பாக முன்பே யாருக்கும் சொல்ல மாட்டார்கள். தேர்வு எழுதியவுடன் நான் அளித்த பதில்களை வைத்து கூட்டி பார்த்தேன். 720 மதிப்பெண்கள் வந்தன. என்னுடன் படித்த பலர் 700 க்கும் அதிகமான மதிப்பெண்களை எடுத்து உள்ளார்கள். நீட் தேர்வு மிகவும் கடினமானது என்ற மனநிலையில் இருந்து மாணவர்கள் முதலில் வெளிவர வேண்டும்.
அந்த மனநிலை வந்தால்தான் படிக்க முடியும். படிப்பதெல்லாம் அதற்கு பிறகுதான். எளிதானது என்று நம்மால் முடியும் என்றும் நம்ப வேண்டும். அதற்கு பிறகுதான் எல்லாமே. நீட் தேர்வு அந்த அளவுக்கு கடினமானது எல்லாம் இல்லை. புரிந்து படித்தாலே போதும். நான் மாநில பாடத்திட்டத்தில் படிக்கவில்லை. 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே அதில் படித்தேன்.
ஆனால், நான் இதை கடினமாக உணரவில்லை. நான் 11 ஆம் வகுப்பு முழுவதும் விடுதியில் தங்கி இருந்தேன். அங்கு இருக்கும்போது நான் செல்போன் பயன்படுத்தவில்லை. இங்கு வந்த பிறகும் நன்றாக படித்தேன். அதே நேரம் அடிக்கடி இசை கேட்பேன். காலை 8 மணி முதல் இரவு 11 அல்லது 12 மணி வரை நான் படிப்பேன்." என்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications