வாரத்தில் 2 நாள் லீவு வேண்டும்! நாடு முழுக்க வங்கி ஊழியர்கள் நாளை ஸ்ட்ரைக்.. வங்கி பணிகள் முடங்கும் அபாயம்
சென்னை: வங்கி ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாரத்தில் 5 நாள் வேலை முறையை அமல்படுத்த கோரி நாளை செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நாடு முழுக்க பண பரிவர்த்தனை சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் மன்றம் அறிவிப்புபடி, இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற உள்ளனர்.

5 நாள் வார வேலை முறை
நாடு முழுவதும் பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற, கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டாலும், வங்கி சேவை இன்றியமையாததாக உள்ளது.
தற்போது வங்கிகளுக்கு மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது போக இரண்டு சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தான் இனிமே சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகள் தோறும் விடுமுறை வழங்க கோரி கோரிக்கை வைத்து வந்தனர்.
வேலைநிறுத்த போராட்டம்
அதாவது 5 நாள் வார வேலை முறை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்திய வங்கிகள் சங்கமும் ஒப்புக்கொண்டன. இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இந்திய வங்கி வேலைநிறுத்தத்தை ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் மன்றம் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
பண பரிவர்த்தனை சேவை பாதிக்கும்?
டிஜிட்டல் வங்கி சேவை பரவலாகக் கிடைக்கின்றது என்பதால், வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது என்றும், போராட்டத்தின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர். இன்று குடியரசு தினம் என்பதால் ஏற்கனவே வங்கிகளுக்கு விடுமுறை தான். நாளை அவர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் அறிவித்து இருப்பதால் தொடந்து 4 நாட்கள் (சனி, ஞாயிறையும் சேர்த்து) வங்கி பண பரிவர்த்தனை சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications