சென்னையில் கிரிக்கெட் விளையாடிய போது விபரீதம்.. பந்து தாக்கி கடற்படை வீரர் சாவு
சென்னை: சென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து தாக்கி கடற்படை வீரர் இறந்தார்.
கிரிக்கெட் விளையாட்டில் பந்துகள் பட்டு மரணம் நிகழ்வது அவ்வப்போது எதிர்பாராதவிதமாக நிகழும். இதேபோல் பந்துகள் பட்டு கிரிக்கெட் வீரர்கள் காயம் அடையும் நிகழ்வும், ஏன் அம்பயர்கள் கூட மரணம் அடைந்த நிகழ்வுகளும் நடந்துள்ளது.

2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும், நியூ சவுத் வேல்ஸுக்கும் இடையேயான போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் சீன் அபாட் வீசிய பந்து பௌன்ஸராக எகிரி பிலிப் ஹியூஸின் தலையை பதம்பார்த்தது. இதில் பிலிப் ஹியூஸ் பரிதாமாக இறந்து போனார்.
இதேபோல் இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை மாதம் நடந்த உள்ளூர் போட்டியில் பந்து தாக்கி அம்பயர் உயிரிழந்தார். இப்படி அடிக்கடி பந்து தாக்கி காயங்களும் மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் 5-வது கேட் அருகில் உள்ள கார் பார்க்கிங்கில் இன்று கடற்படை வீரர்கள் உள்பட சிலர் கிரிக்கெட் விளையாடினர். விளையாடிக்கொண்டிருந்த ராஜஸ்தானின் ஜோகேந்திர சிங் என்ற கடற்படை வீரரின் மார்பில் ரப்பர் பந்து வேகமாக வந்து தாக்கியது. இதில் நிலைகுலைந்த ஜோகேந்திர சிங் பரிதாபமாக இறந்த போனார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications