வாடகை தாய் முறை என்றால் என்ன? இந்தியாவில் அதற்கு தடையா? நயன்தாரா-விக்னேஷ் குழந்தை பெற்றது எப்படி?
சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாடகை தாய் முறையின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த நிலையில் தற்போது இந்தியா முழுக்க வாடகை தாய் முறை பற்றிய விவாதம் எழுந்துள்ளது. அது என்ன வாடகை தாய் முறை? அது இந்தியாவில் தடை செய்யப்பட்டதா? வாருங்கள் பார்க்கலாம்!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் நடந்து 6 மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. இந்த நிலையில்தான் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. திருமணம் ஆகி 6 மாதங்களில் குழந்தை பிறந்தது எப்படி என்று நெட்டிசன்கள் பலர் தேவையற்ற விவாதங்களை நடத்தி வரும் நிலையில்தான் தற்போது இவர்களுக்கு குழந்தை பிறந்தது தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி இவர்கள் வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது நயன்தாரா வயிற்றில் கரு வளராமல், வேறு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்ந்து, இவர்கள் குழந்தை பெற்றுள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் இப்படி குழந்தை பெறும் முதல் தம்பதி நயன்தாரா - விக்னேஷ் சிவன்தான் என்பது
குறிப்பிடத்தக்கது!

வாடகை தாய்
வாடகை தாய் விவகாரம் என்பது இந்தியாவில் பல வருடமாக சர்ச்சையில் இருக்கும் விஷயம் ஆகும். இதை பற்றி குறிப்பாக கடந்த 20 வருடங்களாக தீவிர விவாதங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள 15-20 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். அதாவது கருவை உருவாக்க, வாடகை தாய்க்கு செலவு செய்ய, அவருக்கான தனிப்பட்ட கட்டணம், குழந்தை பிறக்கும் போது உள்ள மருத்துவ செலவு, குழந்தை பிறந்த பின் உள்ள மருத்துவ செலவு எல்லாம் சேர்த்து 15-20 லட்சம் வரை ஆகும்.

சராசரி
இந்தியாவில் இருக்கும் பெண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்பும் நிலையில் வாடகை தாய் மார்க்கெட் இந்தியாவில் மிகப்பெரியதாக இருந்தது. வெளிநாட்டு தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் 25 ஆயிரம் குழந்தைகள் கடந்த 2005-2015 வரை இந்தியாவில் பிறந்துள்ளார். அந்த அளவிற்கு வாடகை தாய் முறையில் இந்தியா மிகப்பெரிய மார்க்கெட்டாக இருந்தது. அதிகமாக வெளிநாட்டு தம்பதியினர், வெளிநாட்டு ஒரு பாலினத்தவர்கள் இப்படி வாடகை தாய் முறைக்கு இந்திய பெண்களை நாடினர்.

தடை
இந்தியாவில் இருக்கும் பெண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்பும் நிலையில் வாடகை தாய் மார்க்கெட் இந்தியாவில் மிகப்பெரியதாக இருந்தது. வெளிநாட்டு தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் 25 ஆயிரம் குழந்தைகள் கடந்த 2005-2015 வரை இந்தியாவில் பிறந்துள்ளார். அந்த அளவிற்கு வாடகை தாய் முறையில் இந்தியா மிகப்பெரிய மார்கெட்டாக இருந்தது. அதிகமாக வெளிநாட்டு தம்பதியினர், வெளிநாட்டு ஒரு பாலினத்தவர்கள் இப்படி வாடகை தாய் முறைக்கு இந்திய பெண்களை நாடினர்.

இரண்டு வகை
இதையடுத்து 2015ல் வெளிநாட்டினர் இந்தியாவில் வாடகை தாய் முறையில் குழந்தை பெற தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் இந்தியாவிற்கு உள்ளே அதற்இரண்டு வகையான வாடகை தாய் முறைகள் மொத்தம் உள்ளன. முதல் முறை Surrogacy in the traditional sense அதாவது பாரம்பரிய வகை. இந்த வகை மூலம் தம்பதியில் ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகை தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார். இதில் வாடகை தாய்தான் குழந்தையின் உயிரியல் தாய். ஆனால் அந்த ஆணின் மனைவி சட்ட ரீதியாக தாயாக கருதப்படுவார். இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது முறை Gestational surrogacy எனப்படும் கர்ப்பகால வாடகைத் தாய். கு தடை இல்லை. 2013லேயே ஒருபாலினத்தவர்கள் இந்த முறை மூலம் குழந்தை பெற இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. 2016ல் மொத்தமாக வாடகை தாய் முறையை தடை செய்ய மசோதா கொண்டு வரப்பட்டது. கடைசியில் கடந்த வருடம் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த தடை மொத்தமாக சட்டமாகி அமலுக்கு வந்தது.

தடை இல்லை
இதற்கு தான் இந்தியாவில் இன்னும் தடை விதிக்கப்படவில்லை. இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கரு முட்டையுடன் சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பின்னர் அந்த கரு வாடகை தாயின் வயிற்றில் சேர்க்கப்படும். இதுதான் கர்ப்பகால வாடகைத் தாய் முறை. இந்த முறையின் படி, கருவுற முடியாத பெண்கள் மட்டும் குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவில் அனுமதி உள்ளது. கருவுற முடியாத பெண்கள் மட்டும் இதில் குழந்தை பெற்றுக்கொள்ள இப்போதும் இந்தியாவில் அனுமதி உண்டு.

இந்தியா நயன்தாரா
இந்தியாவில் தற்போது இந்த முறை அமலில் உள்ளது. இது சட்டப்படி தவறு கிடையாது. இதன் காரணமாக நயன்தாரா அந்த முறை மூலம் குழந்தை பெற்றுள்ளார். அதுவும் இரட்டை குழந்தையாக அவர் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இப்படி குழந்தை பெற்றுள்ளதால் அதை வைத்து நெட்டிசன்கள் பலர் கடுமையான விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதம் செய்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications