நயன்தாரா மீது "பழைய" கோபம்.. வெளியே தலைகாட்டவே முடியவில்லை.. விக்னேஷ் சிவன் குடும்பம் குமுறல்!
சென்னை: வாடகை தாய் முறை மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாராவிற்கு குழந்தை பிறந்ததால், வெளியே தலையை காட்டவே முடியவில்லை என்று விக்னேஷ் சிவன் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாடகை தாய் முறையின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தமிழ் சினிகா உலகில் தற்போது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் செய்தி இதுதான்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் நடந்து 6 மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. இந்த நிலையில்தான் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
இவர்கள் சட்டப்படி குழந்தை பெற்றுக்கொண்டனரா என்ற விவாதம் இதனால் எழுந்துள்ளது.

விவாதம்
வாடகை தாய் முறைக்கு இந்தியாவில் தடை உள்ளது. ஒரு ஆண் - பெண் இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு இருந்தால் மட்டுமே வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள் முடியும். அதற்கும் நிறைய விதிகள் உள்ளன. அப்படி இருக்கும் போது இவர்கள் குழந்தை பெற்றது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் காரணமாக வெளியே தலையை காட்டவே முடியவில்லை என்று விக்னேஷ் சிவன் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்டி
இது குறித்து விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் அளித்த பேட்டியில், தாய்மை அடைவது என்பது பெரிய விஷயம். ஆனால் கல்யாணம் ஆகி 4 மாதத்தில் குழந்தை பிறந்தது என்பதை பற்றி என்ன சொல்வது. வெளியவே சொல்ல முடியவில்லை. ஏதேதோ கேட்கிறார்கள் என்னை. அதனால் வெளியவே தலைகாட்ட முடியவில்லை. இதனால் வெளியே செல்வதை குறைத்துக்கொண்டு உள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

பிரேமா
விக்னேஷ் சிவனின் பெரியம்மா பிரேமா இது குறித்து பேசுகையில், கல்யாணத்திற்கு முன்பே இவர்கள் எல்லாம் ரெடி செய்துவிட்டனர். இதனால்தான் கல்யாணம் ஆனதும் 4 மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. 10 மாதத்திற்கு முன்பே இவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர். இப்பொது கல்யாணம் ஆகி 4 மாதங்களில் குழந்தை பிறந்துள்ளது என்று விமர்சனம் வைத்துள்ளார்.

அழைக்கவில்லை
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தின் போது அவரின் பெரியப்பா மாணிக்கம் அழைக்கப்படவில்லை. அப்போது இதை மாணிக்கம் விமர்சனம் செய்து இருந்தார். அதில். என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை. இந்த திருமணம் திருமணம் போல நடக்கவில்லை. மாறாக இது சினிமா போல நடக்கிறது. நல்ல நேரத்தில் இவர்கள் திருமணம் செய்யவில்லை. ஆனால் இவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது இவர்களுக்கு குழந்தை பிறந்ததை விமர்சனம் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications