பண்ணது ஒரு கல்யாணம்.. பஞ்சாயத்து மட்டும் பத்துக்கு மேல! நயன்தாராவுக்கு எகிறும் பிரஷர்! என்னாச்சு?
சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண நிகழ்வு மற்றும் நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு குறித்து நெட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாரா; பியாண்ட் தி பேரி டேல் (Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் ஆவணப் படம் வெளியானது. இந்த படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்தி உள்ளதாக ஏபி இன்டர்நேஷனல் வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில் தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோஸ் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நயன்தாராவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, உள்ளிட்ட படங்களில் ஹீரோயின் ஆகி இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. தமிழில் விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், சிம்பு, அஜித், ஜெயம் ரவி என சீனியர் ஜூனியர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானார்.
பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகரான தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்திருந்த நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

நயன்தாரா
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருமே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதனால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த 2022 ஜூன் மாதம் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், முக்கிய நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன்
சொல்லப்போனால் தமிழகம் முழுவதுமே நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த பேச்சுகள் தான் எங்கு பார்த்தாலும் நிறைந்திருந்தது. அப்போது முதல் இப்போது வரை திருமணம் தொடர்பான எந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடாத நயன்தாரா அதனை மொத்தமாக netflix நிறுவனத்திற்கு விற்று விட்டதாக கூறப்பட்டது.
நயன்தாரா ஆவணப்படம்
தொடர்ந்து டார்க் ஸ்டுடியோ என்ற நிறுவனம் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண ஆவண படத்தை நயன்தாரா; பியாண்ட் தி பேரி டேல் (Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் வெளியிட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த ஆவணப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த நானும் ரவுடிதான் படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகள் அதில் இடம்பெற்றது.
நஷ்ட ஈடு
அதற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்து நிலையில் தனுஷ் நயன்தாரா இடையே வார்த்தை போர் வெடித்தது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த ஆவணப் படத்தில் சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதாக அதன் உரிமையை வைத்திருக்கும் ஏபி இன்டர்நேஷனல் வழக்கு தொடர்ந்து உள்ளதோடு ஆவணப்படத்தில் இருந்து அந்த காட்சிகளை நீக்க வேண்டும் ஆவணப்படத்தை வெளியிட்ட வகையில் கிடைத்த லாபத்தில் ஐந்து கோடியை வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
சந்திரமுகி வழக்கு
நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் டார்க் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் வழங்கி இருக்கிறது. ஏற்கனவே தனுஷ் தரப்பு 10 கோடி கேட்டு இருக்கும் நிலையில் தற்போது இன்னொரு நிறுவனம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருப்பது நயன்தாராவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications