நெல்லை கவின் ஆணவப் படுகொலை விவகாரம்.. டெல்லியில் இருந்து நெல்லைக்கு வரும் முக்கியப் புள்ளி!
சென்னை: தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நாளை நெல்லை செல்கிறார். கவின் ஆணவப்படுகொலை தொடர்பாக விசாரிக்க நாளை நெல்லைக்குச் செல்கிறார் கிஷோர் மக்வானா. அதேபோல, புதுக்கோட்டை ஆவுடையார்கோவிலில் பட்டியலின சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் நாளை விசாரணை நடத்துகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ் (27). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் அண்மையில் பாளையங்கோட்டை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கவினை பாளையங்கோட்டையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதிகளான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுர்ஜித்தின் அக்கா சுபாஷினியை, பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் காதலித்ததால் அவரை சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரையும் சேர்த்தனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியின் பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கும் சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் இரு பட்டியலின சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரு நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து என்பவர் தேசிய பட்டியலின ஆணையத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், இந்தச் சம்பவங்கள் பற்றி நேரில் விசாரணை நடத்துவதற்காக தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நாளை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் செல்ல உள்ளார். மேலும், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோரை சந்தித்து விசாரணை நடத்த உள்ளார். அதன் பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications