காவு வாங்க காத்திருக்கிறதா வடசென்னை? திருவொற்றியூர் பள்ளியில் நடந்தது என்ன? NDRF ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடசென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில், வாயு கசிவு காரணமாக மாணவிகள் சிலர் மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வடசென்னை.. அசல் மெட்ராஸ் என அழைக்கப்படும் இந்த பகுதிதான் தற்போது வாழ தகுதியற்ற இடமாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னர் எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட அமோனியா கசிவு பதற்றம் ஏற்படுத்தியிருந்தது. ஒரே இரவில் நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சுத்திணறலால் அவதியுற்றனர். விசாரணையில், எண்ணூர் துறைமுகத்திலிருந்து, கோரமண்டல் எனும் உர ஆலைக்கு பைப்லைன் வழியாக அமோனியா அனுப்பப்பட்டபோது அது கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

thiruvottriyur chennai

வடசென்னையில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. சென்னையின் எந்த உயரமான கட்டிடத்திலிருந்த பார்த்தாலும், வடசென்னையை எளிதாக அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். இங்குள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலையின் புகைப்போக்கியிலிருந்து 24/7 நேரமும் நெருப்பு எரிந்துக்கொண்டே இருக்கும். இது வெறும் சாம்பிள்தான். இதைவிட மோசமாக காற்று மாசை ஏற்படுத்தும் ஏராளமான தொழிற்சாலைகள் இங்கு இருக்கின்றன.

இப்படி இருக்கையில் இன்று திருவொற்றியூரில் உள்ள பள்ளி ஒன்றில், வாயு கசிவு காரணமாக மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர். பள்ளியிலிருந்து வாயு வெளியேறியதால் மாணவிகள் மயக்கமடைந்தார்களா? அல்லது பள்ளியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறிய வாயுவால் மாணவிகள் மயக்கமடைந்தார்களா? என்பது இப்போதுவரை தெரியவில்லை. மொத்தம் 35 மாணவிகள் வாயு கசிவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 7 மாணவிகளை தவிர அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தாசில்தார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மறுபுறம் தேசிய பேரிடர் மேலாண்மை குழு பாதுகாப்பு உபகரணங்களோடு ஆய்வை தொடங்கியுள்ளது. உடன் மத்திய சென்னை எம்பி கலாநிதி வீராசாமி இருக்கிறார். முழுமையான ஆய்வுக்கு பின்னரே வாயு கசிவுக்கான காரணம் என்னவென்று தெரியும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

மிக்ஜாம் புயலின்போது எண்ணெய் கழிவுகள் மழை வெள்ளத்தில் கலந்தது, அமோனியா கசிவு, இப்போது வாயு கசிவு என தொடர்ந்து வடசென்னையில் அதிர்ச்சி சம்பவங்கள் பல தொடர்ந்து வருகின்றன. எனவே மக்களின் உயிரை பாதுகாக்க.. இனி வரும் நாட்களில், இங்கு இயங்கும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை சரியாக பின்பற்றுகின்றனவா? என்பது குறித்து உரிய ஆய்வு நடத்தி அதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விதிகளை பின்பற்றாத ஆலைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் வடசென்னை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+