பேரூராட்சிகளில் திமுகவுக்கு ‛டஃப்’ கொடுக்கும் அதிமுக.. பரபரக்கும் கள நிலவரம்
சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் ஒரே கட்டமாக நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் 7604 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், இருகம்யூனிஸ்ட் கட்சிகள், அமமுக, விடுதலை சிறுத்தைகள், நாம்தமிழர், பாமக உள்பட பல்வேறு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அவிநாசி பேரூராட்சி 2 வார்டில் அதிமுக வேட்பாளர் கவிதா வெற்றி பெற்றுள்ளார். தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சி 1-வது வார்டில் அதிமுக வேட்பாளர் குமரேசன் வெற்றி பெறறுள்ளார். இதேபோல வேடப்பட்டி பேரூராட்சி 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். காலை 9 மணி நிலவரப்படி 7 பேரூராட்சிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
பிப்ரவரி 19ல் தமிழகம் முழுவதும் நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 279 மையங்களில் ஓட்டு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
இன்று காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8:45 மணி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் உள்ள 7604 வார்டுகளில் 310 வார்டுகளில் திமுகவும், 227 வார்டுகளில் அதிமுகவும், இதர 107 வார்டுகளில் பிற கட்சியினரும் முன்னிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications