நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் வைத்துக் கொண்டிருந்தது அரசியலமைப்புக்கே எதிரானது: மா.சுப்பிரமணியன்
சென்னை: நீட் விலக்கு சட்டமசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் கூறினார்.
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார். இதையடுத்து மீண்டும் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்யும் வகையில் சட்டசபை சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் கவர்னர் ரவியின் செயலுக்கு சுகாதாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது:
நீட்டை அதிகாரப்பூர்வமாகவும், சட்டபூர்வமாகவும் தமிழக அரசு எதிர்த்து வருகிறது. தமிழகத்தில் அனைவரும் நீட் தேர்வை எதிர்க்கின்றனர். இருப்பினும் 2017 முதல் நீட் தேர்வு முறையில் தான் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

உயர்மட்ட குழு
நீட் விலக்கு தொடர்பாக ஆராய ஓய்வு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துகள் கேட்டு விரிவான அறிக்கை அளித்தனர். அதனடிப்படையில் நீட் விலக்கு தொடர்பாக சட்டசபையில் சட்ட முன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்படி சரியானது அல்ல
தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலிக்கும் இந்த சட்ட முன்வடிவை கவர்னருக்கு அனுப்பப்பட்டது. முதல்வர் ஸ்டாலினும் கவர்னரை சந்தித்து ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். ஆனால் 142 நாட்களுக்கு பிறகு மறுபரிசீலனை செய்யும்படி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் கவர்னர் அதை செய்யாமல் தன்னிச்சயைாக முடிவெடுத்தது அரசியல் சட்டப்படி சரியானது அல்ல.

அவமானப்படுத்தும் செயல்
ஏ.கே.ராஜன் உயர்மட்ட குழு அறிக்கையில் 7 பரிந்துரைகளை வழங்கியது. தலைமை செயலாளர் தலைமையில் பல்வேறு துறை செயலர்கள் ஆராய்ந்து 3வது பரிந்துரையை ஏற்று சட்ட முன்வடிவு உருவாக்கி கவர்னருக்கு அனுப்பினோம். ஆனால் வெறும் அறிக்கையின் அடிப்படையில் சட்ட முன்வடிவு கொண்டு வந்ததாக கவர்னர் கூறியுள்ளார். இது தவறானது. இந்த விவகாரத்தில் கவர்னரின் மதிப்பீடுகள் தவறு. உயர்மட்ட குழவை அவமானப்படுத்துவதாக உள்ளது. பயிற்சி நிறுவனங்களி்ல் பயிற்சி பெறுபவர்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். இது வசதியில்லாத மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ஒன்று அதிக முறை பயிற்சி பெற்றுள்ளனர். பலமுறை எழுதி வெற்றி பெறும் மாணவர்களுக்கு தான் நீட் சாதகமாக உள்ளது. ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் முற்றிலும் தவறு. உயர்மட்ட குழுவை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. பயிற்சி வகுப்புக்கு செல்லும் மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். கிராமப்புறம், பட்டியல், பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் எட்டாக்கனியாக உள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களை இயற்பியல், உயிரியல் தேர்வு எழுத வைத்து அறிவு பரிசோதிக்கப்படுகிறது. இதற்கு முன்பு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ சேர்க்கை நடந்தது. தற்போதைய நீட் தேர்வு அரசு, தமிழ் பள்ளியில் படித்தவர்களை எதிர்மறைவாக தாக்குகிறது. இதனால் சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி இருக்க வேண்டும். அதை கவர்னர் மேற்கொள்ளாதது அரசியலமைப்பின்படி சரியானது அல்ல.

கேலிக்குத்தாக்குகிறது
நீட் தேர்வு தனிப்பயிற்சியை ஊக்குவிக்கிறது. மாணவர்களுக்கு 2 முதல் 3 ஆண்டு பயிற்சி தேவையுள்ளது. பயிற்சிக்கான கட்டணம் அதிகரிக்கிறது. இதனால் ஏழை மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பலமுறை நீட் எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்க முடிகிறது. சி.எம்.சி., மத்திய அரசு வழக்கில்உச்சநீதிமன்ற தீர்ப்பு நீட்டை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என கவர்னர் கூறியுள்ளார். கொள்கை அடிப்படையில் கூறிய சட்ட முன்வடிவுக்கு, தீர்ப்பை சுட்டிக்காடியது அரசியலமைப்பு கட்டமைப்பை கேலிக்கூத்தாக்குகிறது. இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டி காட்டி இருப்பது சரியானது அல்ல.
Recommended Video

மாநில தேவைகள்
நீதியரசர் பானுமதி தீர்ப்பில், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஒழுங்குருத்தல் மாநில அரசின் சட்டம் மாநிலங்களின் அதிகார வரபம்புக்கு உட்பட்டதாக உள்ளது. உயர்கல்வித்துறை மாநிலங்களில் வளர்ச்சி, மாணவர்களின் உயர்கல்வியை பாதிக்கும் சூழலில் மத்திய அரசு நிதி வழங்கும் கல்வி நிறுவனங்களை தவிர்த்து பிற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கட்டணத்தை மாநில அரசே வகுக்க முடியும். ஏனென்றால் மாநில மக்களின் தேவைகளை அந்தந்த மாநிலங்களே அறிந்து கொள்ள முடியும். மாநில பாடத்திட்டம், பிற பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, சமவாய்ப்பை அந்தந்த மாநிலங்களே வழங்க முடியும் என கூறியுள்ளார். இதனால் இந்த சட்ட முன்வடிவை ஒருமனதாக நிறைவேற்றிட கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு பேசினார்.
-
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications