நேருக்கு நேர்.. முதல்வருக்கும் எடப்பாடிக்கும் காரசார மோதல்.. கருப்பு பேட்ஜுடன் வெளியேறிய அதிமுகவினர்
அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரவையில் பங்கேற்றனர்
சென்னை: நீட் விலக்கு மசோதா தாக்கல் என அறிவிக்கப்பட்ட நிலையில், கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்ற அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 4 வருடங்களாக தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன..
அந்தவகையில், இன்றைய தினம் நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டதால், மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் தமிழக அரசியல் களத்தில் நிலவ தொடங்கின.

உறுப்பினர்கள்
அதன்படி இன்று காலை அவை கூடியதுமே, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க ஒவ்வொருவராக வந்தனர்.. அப்போது, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மாணவன் தனுஷ் மரணம் ஏற்பட திமுக அரசின் தோல்வியே காரணம் என்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், கருப்பு பேட்ஜ் அணிந்து அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைக்கு வந்திருந்தனர்.

பேரவை
அவை தொடங்கியதும், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "ஜெயலலிதா இருக்கும் போது கூட நீட்தேர்வு வரவில்லை... நீட் தேர்வு தொடர்பாக இன்று பேரவையில் மசோதா கொண்டு வருகிறோம்.. இந்த சட்டத்தை எதிர்க்கட்சியும் இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்... ஆனால், இதற்கு அதிமுக தரப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.

எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரவில்லை.. நீட் தேர்வு பயத்தால் நேற்று மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டதை குறிப்பிட்டு பேசினார்.. மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது என்னாயிற்று என்று விவாதமும் செய்தார்...

கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்று குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்த வாணியம்பாடியை சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி கூறிய ஒரு கருத்து, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது..

வெளிநடப்பு
இதனால் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.. நீட் தேர்வு தொடர்பாக, அதிமுக - திமுகவினர் இடையே காரசார விவாதமும் ஏற்பட்டது.. தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருமே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. நீட் விலக்கு மசோதா தாக்கல் என அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் பங்கேற்ற அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததும், அதையொட்டி திமுக அரசு மீதான எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியும் பரபரப்பை கூட்டி வருகிறது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications