இதயத்தை நொருக்குகிறது.. நீட் அரசியல் செய்யும் திமுகவே மாணவர் தற்கொலைக்கு காரணம்.. அண்ணாமலை ஆவேசம்
சென்னை: சேலத்தில் நீட் தேர்வு எழுத வேண்டிய மாணவர் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்த செய்தி இதயத்தை நொருக்குகிறது, நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் திமுகதான் மாணவரின் மரணத்திற்கு காரணம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
நீட் தேர்வு தமிழ்நாட்டில் மேலும் ஒரு உயிரை பறித்துள்ளது. கடந்த வருடங்களில் நீட் தேர்வு காரணமாக பல மாணவர்கள் பலியான நிலையில் இன்றும் சேலத்தில் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு எழுத அச்சப்பட்டு இவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஏற்கனவே இரண்டு முறை தேர்வு எழுதி இவர் தோற்றுவிட்டார். இந்த நிலையில் மூன்றாவது முறை தேர்வில் தோல்வி அடைந்தால் டாக்டர் ஆகும் வாய்ப்பே கிடைக்காது என்பதால் தேர்வு எழுதாமலே தற்கொலை செய்து கொண்டார்.

அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை இந்த மாணவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளார். அதில், சேலத்தில் நீட் தேர்வு எழுத வேண்டிய மாணவர் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்த செய்தி இதயத்தை நொருக்குகிறது. உச்ச நீதிமன்ற வழக்குகள், விசாரணைகளை கடந்து இந்த தேர்வு நடந்து வருகிறது. 2020ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனால் திமுக இந்த தேர்வை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறது.

திமுக
இந்த நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் திமுகதான் மாணவரின் மரணத்திற்கு காரணம். மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை திமுக நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு என்று அண்ணாமலை தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இரங்கல்
இந்த நிலையில் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், மாணவர் தனுஷ் மரணத்துக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது""நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும்"நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அஞ்சலி
அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி - அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சேலத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். மாணவரின் பெற்றோரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தினார்.
-
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!












Click it and Unblock the Notifications