நீட் மசோதா.. ஐகோர்ட்டை அதிர வைத்த தமிழக அரசு.. 'ஏன் சொல்லவில்லை'.. நீதிபதிகள் சரமாரி கேள்வி
சென்னை: 2017-ல் நீட் விலக்கு மசோதாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கு தமிழக அரசு அந்த ஆண்டே ஒப்புகை தந்துள்ள நிலையில், அதுபற்றி சட்டசபையிலும், பொதுவெளியிலும் தெரிவிக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு கோரி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதா நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அப்போதே தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் நீட் மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு இதுவரை நிறுத்தி வைத்தது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு சொல்லிவந்தது.

மத்திய அரசு தகவல்
இந்நிலையில் நீட் தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமனறம் மத்திய அரசை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மத்திய அரசும் அடுத்தடுத்த வாதங்களின் போது அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கடந்த 2017ம் ஆண்டே நீட் மசோதாவை குடியரசுத் தலைவர் நிறுத்திவைத்ததகாவும். அதைத்தொடர்ந்து மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தது.

சட்டசபையில் கேள்வி
இந்த விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் இதுபற்றி கேள்வி எழுப்பி பேசுகையில், நீட் மசோதா 2017ம் ஆண்டே நிராகரிக்கப்பபட்ட நிலையில், ஏன் சட்டசபையில் இந்த தகவலை மறைத்தீர்கள் என்றும், ஏன் முன்பாக தெரிவிக்கவில்லை என்றும தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சண்முகம் மறுப்பு தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு கேள்வி
இந்நிலையில் நீட் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 2017-ல் நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கு தமிழக அரசு 2017ம் ஆண்டு ஜூலை 25ம் தேதியே ஒப்புகை தந்துள்ள நிலையில், நீட் மசோதா திருப்பி அனுப்பியது குறித்து சட்டசபையில் தெரிவிக்காதது ஏன்? பொதுமக்களுக்கு தெரிவிக்காதது ஏன்? என உயர்நீதிமன்றம் கண்டித்தது.

ஏன் சொல்லவில்லை
மேலும் மத்திய அரசின் கடிதம் பற்றி தமக்கு தெரியாது என்று செயலாளரோ அமைச்சரோ கூற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மசோதா திருப்பி அனுப்பபட்டது எம்எல்ஏக்களுக்கு மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் தெரிய வண்டிய விஷயம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் மசோதக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறுவதை நிராகரிக்கப்பட்டதாகவே கருத வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மசோதக்களை மீண்டும் நிறைவேற்றலாம்
மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் அவற்றை நிறைவேற்ற எந்த தடையும் இல்லை என்றும் மசோதாவை ஏற்பது, நிராகரிப்பது, திருப்பி அனுப்புவது போன்றவை குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உள்பட்டது என்றும் அதை கேள்வி எழுப்ப முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஆக. 13ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications