Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் விலக்கு மசோதா... மத்திய அரசின் கருத்துக்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய சுகாதார துறையின் கருத்துகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. லோக்சபாவில் மதுரை எம்பி சு வெங்கடேசன் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா இந்த பதிலை அளித்துள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இது கடந்த சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தன.

இதனால் திமுக தனது தேர்தல் அறிக்கையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்தது.

நீட் விலக்கு மசோதா

நீட் விலக்கு மசோதா

இதையடுத்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் நீட் விலக்கு மசோதா 2021 செப்டம்பர் மாதம் 13ம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை அவர் 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஆளுநர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

 மத்திய அரசு பதில்

மத்திய அரசு பதில்

இந்நிலையில் தான் மதுரை எம்பி சு வெங்கடேசன் தமிழகத்துக்கு நீட் விலக்கு மசோதா தொடர்பாக லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்குஉள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதில் அளித்துள்ளார். அதில் மத்திய அரசின் கருத்துகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அஜய் குமார் மிஸ்ரா அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

கருத்து கேட்பு துவக்கம்

கருத்து கேட்பு துவக்கம்

"தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் "தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்ட பிரிவுகள் சட்ட வரைவு 2021" அனுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு 02.05.2022 அன்று வந்து சேர்ந்தது. தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் மாநில ஆளுநர்கள் அனுப்புகிற சட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது நடைமுறை. அது போன்று மத்திய அமைச்சகங்கள் கருத்து கேட்பு துவக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Tamilnadu-க்கு Neet Exam விலக்கு கிடைக்குமா? | Public Opinion
    தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பு

    தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பு

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் இரண்டும் தங்களின் கருத்துக்களை அளித்து விட்டன. அவற்றை தமிழ்நாடு அரசிடம் ஜூன் 21 மற்றும் 27 முறையே பகிர்ந்து கொண்டு விளக்கங்களை கேட்டுள்ளோம். இதுபோன்ற பிரச்சினைகளில் கலந்தாலோசனை நேரம் எடுக்கும்; ஒப்புதலுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது." என கூறப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+