Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படிச்சு ஜெயிச்சவங்க 10 லட்சம் பேரை சொல்வேன்.. அதன் கெத்து.. ஜோவிகா கொஞ்சம் கோபிநாத் பேச்சை கேளும்மா

Subscribe to Oneindia Tamil

சென்னை: உசுரே போனாலும் பிள்ளைங்களை படிக்க வேண்டும் என நினைக்கிறது தமிழ்நாட்டில் தான் என்று நீயா நானா கோபிநாத் கூறியுள்ளார். குண்டுமணி தங்கத்தை கூட விற்று பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுற அம்மாக்கள் இருக்கிற ஊர் இது என்று கல்வியின் முக்கியத்துவம் பற்றி நீயா நானா கோபிநாத் பேசிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசித்திரா, ஜோவிகாவிற்கு படிப்பு விஷயத்தில் அட்வைஸ் செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து ஜோவிகா மற்றும் விசித்ராவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது ஜோவிகா 'படிப்பு விஷயத்தில் நிறைய குழந்தைகள் தப்பான முடிவை எடுக்கிறார்கள்' என்று விசித்திராவிடம் கடுமையாக வாதிட்டார்.

Neeya Naana Gopinath speech video answer to Bigg boss 7 Tamil Jovika Vijaykumar Debate for Education

வனிதா மகள் ஜோவிகா 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். மேலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் அது சம்பந்தப்பட்ட படிப்பில் டிப்ளமோ படித்துள்ளார். இதைபற்றி பிக்பாஸில் சமீபத்தில் பேசியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்வி முக்கியமில்லை என சொன்ன நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத் கல்வி குறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய கோபிநாத், "படிச்சி எவன் ஜெயிச்சிருக்கான், படிக்காதவர்கள் தான் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர், காமராஜர், பில் கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் படித்தாரா என்றெல்லாம் கேட்கிறோம். படிக்காமல் ஜெயித்தவர்கள் 10 பேரை சொல்ல முடியும். ஆனால் 11வது ஒரு ஆளை சொல்ல முடியாது. எவனும் கிடையாது. ஆனால் படிச்சி ஜெயிச்ச 10 லட்சம் பேரை நான் சொல்வேன்.

உங்களை திசை திருப்புகிறார்கள். கல்வி தான் நமக்கு முக்கியமானது. அறிவு தான் அர்த்தம் காக்கும் கருவி. இன்னைக்கு தமிழ்நாட்டுல இந்தி திணிப்பு, நீட் என பிரச்சினைகளை கொடுக்கிறார்கள். ஆனால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஒரு வருடத்தில் நீட் தேர்வில் தமிழ் மாணவர்கள் தான் டாப்பர்ஸ்களாக வருவார்கள். அந்த ஃபார்முலா பற்றி தெரிஞ்சா போதும். அப்படி பார்க்கும்போது கல்வி என்பது ரொம்ப முக்கியமானது.

Neeya Naana Gopinath speech video answer to Bigg boss 7 Tamil Jovika Vijaykumar Debate for Education

காமராஜர் வந்த பிறகு தான் தமிழத்தில் கல்வி என்பது பெரிய அளவில் தலைதூக்கியது. பசி இருக்கும் பிள்ளையால் படிக்க முடியாது என நினைத்த காமராஜர் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். படிப்பதற்கான வாய்ப்பை பள்ளிக்கூடத்தில் தான் உருவாக்க வேண்டும். மதிய உணவு திட்டம் வந்த பிறகு தான் நம்முடைய தாத்தா, அப்பாக்கள் படிக்க தொடங்கினார்கள். கடைக்கு வேலைக்கு போனவர்கள் தொடங்கி களை எடுக்கும் வேலை சென்றவர்கள் வரை எல்லோரும் பள்ளிக்கூடம் போனது காமராஜர் கொண்டு வந்த திட்டத்தால் மட்டும் தான். ஆனால் அவரோ படிக்காதவர்.

அப்படி படிக்காத காமராசர் ஏன் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை யோசிக்க வேண்டும். மதிய உணவுத்திட்டம் அடுத்தடுத்து சத்துணவு திட்டமாக உருமாற்றம் அடைந்தது. படிக்காத காமராசர் ஏன் படிக்க வைக்க ஆசைப்பட்டார். காரணம் படிக்காத என்னால் இவ்வளவு செய்ய முடியும் என்றால் படித்த என் பிள்ளைகளால் எவ்வளவு செய்ய முடியும் என அவர் கண்ட கனவு தான் இன்று என் முன்னால் மாணவர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள்.

போய் வடநாட்டில் இருந்து வருபவர்களிடம் கேட்டுப் பாருங்கள். வறுமை இருந்தால் வேலைக்கு கூப்பிட்டு போய் விடுவார்கள். உசுரே போனாலும் பிள்ளைங்களை படிக்க வேண்டும் என நினைக்கிறது தமிழ்நாட்டில் தான். குண்டுமணி தங்கத்தை கூட விற்று பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுற அம்மாக்கள் இருக்கிற ஊர் இது. சமூக வலைத்தளங்களில் விளையாட்டா படிப்பு ஒன்னுமே கிடையாது என சொல்பவர்களிடம் போகாதீர்கள். அவர்கள் எல்லாம் மக்கு பசங்க என்றும் கோபிநாத் கூறியிருந்தார்.

படிப்பு என்பது மார்க் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. படிப்பு தான் சமூக நீதியை சொல்லி கொடுத்துள்ளது. ரோட்டில் ஏதாவது நடந்தால் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்போம், தட்டிக்கேட்க மாட்டோமா. அந்த அறிவை சமூக நீதி கொடுத்தது. கல்வி கொடுத்துச்சு, பெரியார் கொடுத்தார் என்று மாணவர்கள் மத்தியில் உணர்ச்சிகரமாக பேசியிருந்தார் கோபிநாத். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Neeya Naana Gopinath speech video answer to Bigg boss 7 Tamil Jovika Vijaykumar Debate for Education

இந்த நிலையில் சிங்கிள் மதர் நிகழ்ச்சியில் படிப்பின் முக்கியத்துவம் பற்றி நீயா நானா நிகழ்ச்சியில் கல்வியின் அவசியம் பற்றி பெண்கள் பேசியதும் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதனையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். சிங்கிள் மதராக இருந்து தனது இரண்டு மகன்களை படிக்க வைத்ததை கண்ணீர் மல்க கூறினார் ஒரு தாய். தனியார் பிரைவேட் கம்பெனியில் 300 ரூபாய்க்கு வேலை செய்து மகன்களை படிக்க வைத்தேன். தற்போது எனது மகன்கள் வருமானத்தில் 300 ரூபாய் தினசரி செலவு செய்கிறேன் என்று பெருமையுடன் கூறினார் அந்த தாய். தமிழ்நாடு ஜெயித்ததற்கு காரணம் அந்த கல்விதான் அதுதான் கெத்து என்றும் கூறினார் கோபிநாத். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதனை பதிவிட்டுள்ள ஒரு நெட்டிசன், ஜோவிகாவிற்கு பயர் விட்ட பலர் அதன் பின் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். 97% பேர் குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்றும் வழக்கம் போல அந்த 3% மேல்தட்டு எலைட்டுகள் சமோசா விற்று பிழைத்துக் கொள்ளலாம்.. டீக்கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என உருட்டினர்..

Neeya Naana Gopinath speech video answer to Bigg boss 7 Tamil Jovika Vijaykumar Debate for Education

நம் விவாதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக Delhi based writer cum Economic journalist @madversity அவர்கள் நேற்று எதேச்சையாக பதிவிட்ட அவரின் இந்த ட்விட்டர் பதிவு மிக முக்கியத்துவம் பெறுகிறது

"2028ல் இந்தியாவின் பொருளாதாரம் #5Trillion dollar economyஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதில் தமிழ்நாடு மட்டும் #1Trillion dollar economyஐ தொடும் என்றும் சொல்லி இருக்கிறார். மேலும் . இந்தியாவின் மக்கள்தொகையில் 6% மட்டுமே உள்ள தமிழ்நாடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20%க்கு அருகில் இயங்குகிறது எனவும் இதற்கு மிக முக்கிய காரணம் தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகநீதியின் விளைவு என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

1920ம் ஆண்டு நீதிக்கட்சியில் ஆரம்பித்து காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என இன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின் வரை தங்கள் ஆட்சியில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததுதான். புத்தகம் தர்றோம், படிக்க வாங்க மதிய சாப்பாடு தர்றோம் படிங்க வாங்க சத்துணவு தர்றோம் படிங்க வாங்க முட்டை தர்றோம் படிங்க வாங்க பால் தர்றோம், படிக்க வாங்க சைக்கிள் தர்றோம், படிக்க வாங்க யூனிபார்ம் தர்றோம், படிக்க வாங்க மாசம் ஆயிரம் ருபாய் தர்றோம், படிக்க வாங்க தற்போது காலை உணவும் தர்றோம் படிங்க.. என எப்படியாவது தமிழக குழந்தைகள் எல்லோரையும் படிக்க வைத்துவிட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டின் அரசியல்கட்சிகள் மற்றும் தலைவர்களின் எண்ணமாக இருந்தது.

இந்த கட்டமைப்பை உடைக்கத்தான் வடக்கிலிருந்து தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். அதற்கு இங்கிருக்கும் சில புரோக்கர்களும் துணை செல்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி வெற்றி பெறுவோம். நம் குழந்தைகள் அனைவரும் முன்னேறி செல்வார்கள் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன். கல்வியை மட்டுமே நம்மிடம் இருந்து யாரும் களவாட முடியாது என்பதை இன்றைய தலைமுறையினர் புரிந்து கொண்டால் சரிதான். அதைத்தான் முதல்வர் ஸ்டாலினும் அடிக்கடி மாணவர்கள் மத்தியில் பேசும் போது கூறி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+