Neeya Naana: வவ்..வவ்..வவ்.. நாய் போல் குரைத்து காட்டிய நடிகை அம்மு! எபிசோடில் எடிட் செய்த நீயா நானா? என்னாச்சு?
சென்னை: விஜய் டிவியில் இன்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி தான் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் Vs தெரு நாய்களுக்கு உரிமை உண்டு என இரு தரப்பும் கருத்து யுத்தம் நடத்திய நிலையில், நடிகை அம்மு உள்ளிட்ட சிலர் தெருநாய்கள் போல குரைத்துக் காண்பித்தனர். நிகழ்ச்சியின் ப்ரோமோவில் இந்த வீடியோக்கள் வந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான போது அவை கட் செய்யப்பட்டது நெட்டிசன்களிடம் பலத்த விமர்சனத்தை பெற்றுள்ளது.
விஜய் டிவியில் மிகப் பிரபலமான ஷோக்களில் ஒன்று நீயா நானா. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. பல சேனல்கள் இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளை முயற்சித்தும் அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
ஞாயிறுதோறும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். வெறும் வாத - விவாதம் அன்றி சமூகம் சார்ந்த பல புரட்சிகளை நீயா நானா ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.

நீயா நானா
மூடநம்பிக்கை, சாதி ஒழிப்பு, சமூக நீதி என பல முற்போக்கு சிந்தனைகளை பொதுவெளிக்கு கொண்டு வந்ததில் நீயா நானா நிகழ்ச்சிக்கும் அதன் தொகுப்பாளரான கோபிநாத்துக்கும் பங்கு உண்டு. சில நேரங்களில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களும் பாராட்டுகளையும், சில நேரங்களில் விமர்சனங்களையும் பெறுவது வழக்கம். அப்படித்தான் இந்த வார நீயா நானா நிகழ்ச்சி இருந்தது. தற்போதைக்கு இந்தியா முழுவதும் பெரிய பிரச்சனை என்றால் அது தெருநாய்கள் விவகாரம் தான்.
விஜய் டிவி
பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை தெரு நாய்கள் தாக்குதலால் லட்சக்கணக்கானோர் காயமடைந்து இருக்கின்றனர். ஏராளமானோர் உயிரிழந்து இருக்கின்றனர். இதை அடுத்து தெரு நாய்களை காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை கண்டித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் என்ற பெயரில் பலரும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடிகை அம்மு உள்ளிட்டோர் தெரு நாய்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
நீயா நானா விவாதம்
இந்த நிலையில் தெரு நாய்கள் இல்லா நகரம் வேண்டும் - நகரங்களில் தெரு நாய்களுக்கும் உரிமை உண்டு என்ற விவாத பொருளோடு இன்று நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தெருநாய்களுக்கு ஆதரவாக நடிகை அம்மு உள்ளிட்டோரும், தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் என ஊடகவியலாளர் உமா மகேஸ்வரன் உள்ளிட்டோரும் வாதிட்டனர். தற்போது இந்த விவாதம் தான் சமூக வலைதளங்களில் தனியாக ஒரு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நீயா நானா ப்ரோமோ
குறிப்பாக தெரு நாய்களுக்கு ஆதரவாக இருப்போர் தெரு நாய்க் கடியால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கருணை காட்டுவதில்லையே என விமர்சனங்களை முன்வைத்துனர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். அதற்கு பதில் சொல்ல முடியாமல் தெருநாய் ஆதரவாளர்கள் திணறினர். இதனையடுத்து நெட்டிசன்கள் எக்ஸ் உள்ளிட்டசமூக வளைதளங்களில் அவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நடிகை அம்மு
இதைவிட விஜய் டிவியின் ஒரு செயல்தான் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. காரணம் நீயா நானாவின் இந்த வார எபிசோடின் ப்ரோமோ கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. அதில் குறிப்பாக ஊடகவியலாளர் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுப்பிய கேள்விக்கு நடிகை அம்முவும் மற்றொரு பெண்ணும் நாய்கள் போல குரைத்து காட்டினர். அதாவது நாய்கள் செல்லமாக இருந்தால் எப்படி குரைக்கும்.. உதவி தேவை என்றால் எப்படி குரைக்கும்.. என விதவிதமாக குரைத்துக் காட்டினார்கள்.
விஜய் டிவி
இது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில் இன்று ஒளிபரப்பான எபிசோடில் நடிகை அம்மு உள்ளிட்டோர் குரைத்துக் காட்டிய காட்சிகளை எடிட் செய்து விட்டனர் நீயா நானா குழுவினர். ப்ரோமோவில் இந்த காட்சிகள் இருந்த நிலையில், அதனை நிகழ்ச்சியில் ஒளிபரப்பாதது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. மேலும் தெரு நாய்களுக்கு எதிராகவும் பேசிய பலரது முக்கிய கருத்துக்களை விஜய் டிவி நிர்வாகம் எடிட் செய்து வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications