Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரு Vs திமுக? மோடி Vs ஸ்டாலின்! 62 ஆண்டுகள் கழித்து வரலாறு திரும்புகிறதா?

Subscribe to Oneindia Tamil

மூன்றாவது முறையாகப் பிரதமராக நாளை நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இதன் மூலம் அவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 95 ஆண்டுகள் கழித்து உருவான கட்சி பாஜக. இந்தியாவில் ஒரு பழமையான கட்சியின் சாதனையை முறியடித்திருப்பது சாதாரண விசயம் இல்லை.

lok sabha election 2024 DMK alliance mk stalin Jawaharlal Nehru Narendra Modi

இதில் என்ன வேறுபாடு என்றால், நேரு பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தார். மோடி கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு அரசாங்கத்தை அமைக்க உள்ளார். எப்படிப் பார்த்தாலும் இது பாஜக என்ற தனிப்பெரும் கட்சிக்கு இது சாதனைதான்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு முதல் பிரதமராகப் பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை, அவர் மாரடைப்பால் உயிரிழக்கும் வரை இந்தப் பதவியிலிருந்தார்.

அவர் முதல்முறையாகப் பதவியேற்ற காலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு இல்லை. ஆதரவு அலைதான் வீசியது. ஆனால், 3ஆவது முறையாகப் பதவியேற்கும் போது நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு இருந்து. பிராந்திய கட்சிகள் வலுப்பெறத் தொடங்கிவிட்டன.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் 1949இல் தொடங்கப்பட்ட திமுக, காங்கிரசையும் நேருவையும் மிகக் கடுமையாக விமர்சிக்கும் கட்சியாக இருந்தது. ஆகவே, நேருவின் 3ஆவது பதவிக்காலம் பஞ்சு மொத்தையாக இருக்கவில்லை.

அதேநேரத்தில் மோடியைப் போன்று முள் படுக்கையாகவும் அந்தப் பதவி அவருக்கு இருக்கவில்லை.

நேருவின் 3ஆவது பதவிக்காலம்

மாநிலக் கட்சிகளின் ஆதிகமும் செல்வாக்கும் அதிகரித்திருந்தாலும், மொத்தம் 494 மக்களவைத் தொகுதிகளில் 361 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகப் பிரதமரானார் நேரு. சிபிஐ 29 தொகுதிகளில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதேபோல ராஜாஜியின் சுதந்திரக் கட்சி 18 இடங்களை வென்றிருந்தது. .

மூன்றாவது முறையாகப் பதவியேற்க உள்ள மோடி, நேற்று இந்திய அரசியல் சாசன ஏட்டைத் தொட்டு வணங்கினார். தேர்தல் பரப்புரையில் வகுப்புவாத கருத்துகளைப் பேசிய அவர், பிரதமராகப் போகும் தருணத்தில் அனைத்து மதமும் சமம் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால், நேரு எப்போதும் மத அடிப்படையிலான அரசியல் மற்றும் சாதி, மொழி அடிப்படையிலான பிரிவினைகளை எதிர்த்து வந்தார்.

அதாவது மார்ச் 19, 1962 இல் மக்களவையில் நேரு உரையாற்றிய போது, “தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரிவினைவாதக் குரல்கள் எழுந்தன” என்று சொன்னார். அவர் குறிப்பாக இந்தப் பேச்சில் தமிழ்நாட்டில் உள்ள திமுகவைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.

“இந்த தேர்தலில் காணப்பட்ட அடிப்படையான விஷயம், சாதிய மற்றும், வகுப்புவாதப் போக்குகள்தான். இவை தீங்கு விளைவிக்கக் கூடியவை. நாட்டையே சிதைக்கும் போக்குகள். முடிந்தவரை இதைச் சமாளிக்கப்பட வேண்டும். தென் இந்தியாவில் ஒரு கட்சி எழுச்சி பெற்றுள்ளது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவார்கள்” என்றார்.

மேலும் இந்த உரையின்போது காங்கிரஸ் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடினார்.

"காங்கிரஸ் வேட்பாளர்களை நல்லொழுக்கம் கொண்ட தேவதைகள் என நான் பாசாங்கு செய்ய மாட்டேன். ஆனால் நான் சொல்கிறேன், இது என் அபிப்ராயம். இந்தத் தேர்தல்களில் காங்கிரஸின் எதிரிகள் என்ன செய்தார்கள் என்பதைக் கண்டு நான் அளவுக்கு அதிகமாக அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் மன்னிக்கவே முடியாதவர்கள்” என்றார்.

"எந்தக் கட்சியின் பெயரையும் எந்த நபரின் பெயரையும் நான் குறிப்பிடச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்குக் கண்ணியம் இல்லை. சில தனிப்பட்ட காங்கிரசார் அவ்வாறு செய்திருக்கலாம்” என்று கூறினார்.

மூன்றாவது பதவிக்காலத்தில் நேருவின் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டது. 1962 அக்டோபரில் நடந்த சீனாவுடனான போர் நேருவின் வெளியுறவுக் கொள்கையான பஞ்சசீல கொள்கைக்கு அடியைக் கொடுத்தது.

இந்தியாவுக்கு வெளியே உள்ள பிரச்சினைகளைக் கடந்த 1963 இல் நடைபெற்ற பல இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்தது.

இந்தப் பின்னடைவுகளால், ஜேபி கிருபலானி, ராம் மனோகர் லோஹியா தீன்தயாள் உபாத்யாயா போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை வெற்றிபெற்றனர் இறுதியில் நேருவின் அரசாங்கத்திற்கு எதிராக ஆகஸ்ட் 1963 இல் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டிய அளவுக்கு நெருக்கடி வலுத்தது.

நேரு இதைத் தோற்கடிக்க முடித்தார். அது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சகாப்தமான தருணமாக மாறியது. எதிர்க்கட்சிகள் காங்கிரஸின் வலிமைக்குச் சவால் விடுத்தன.

பிரதமருக்கான சவால்கள்

இந்தியாவில் தொடர்ந்து மூன்றுமுறை பொதுத்தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பது மலைக்க வைக்கும் சாதனை. ஏனென்றால் ஐந்தாண்டுகளில் வாக்காளர்களின் உணர்வுகளும் விருப்பங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

அதை எல்லாம் பொடிப் பொடியாக உடைத்துத் தள்ளிவிட்டு, எதிர்க்கட்சிகள் தரும் நெருக்கடியைச் சமாளித்து பிரதமராகப் பதவியில் அமர்வது எளிதல்ல. ஆகவே, நேரு மதச்சார்பின்மையை இந்தியாவின் பலமாக முன்வைத்து பதவிக்கு வந்தார்.

அதற்கு எதிர் திசையில் 95 ஆண்டுகள் கழித்து மதவாதத்தை முன்வைத்து மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவி ஏற்க உள்ளார்.

இந்த இரு சாதனையும் ஒன்றல்ல!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+