ரூ4 கோடியை கன கச்சிதமாக போலீசில் போட்டுக் கொடுத்த கறுப்பு ஆடு யார்? கொந்தளிக்கும் நெல்லை பாஜக!
சென்னை: திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டு பிடிபட்ட ரூ4 கோடி விவகாரம் தமிழக பாஜகவில் பெரும் புகைச்சலைக் கிளப்பிவிட்டதாம்.
திருநெல்வேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குறிப்பிட்ட கோச்சில் ஏறி மிக சரியாக 3 நபர்களை அடையாளம் கண்டு ரூ4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரூ4 கோடி பணம், திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது; சிக்கிய 3 பேரும் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சிக்கியவர்களிடம் இருந்து பாஜக உறுப்பினர் அட்டைகளும் பிடிபட்டுள்ளன.

இதனையடுத்தே நயினார் நாகேந்திரனின் உதவியாளர், ஹோட்டல்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளைத் தொடர்ந்து தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த விவகாரம் திருநெல்வேலி பாஜகவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் ஆளும் கட்சியின் வேட்பாளருக்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது எப்படி சாத்தியமானது என்பதெல்லாம் விவாதிக்கப்பட்டும் வருகிறது.
ஹைதராபாத்தில் இருந்து திருநெல்வேலிக்கு பணம் கொண்டுவரப்படும் விவகாரம் பாஜகவின் மேல் மட்டத்தில் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது; அப்படியான சூழ்நிலையில் மிகச் சரியான இந்த கோச்சில் இந்த சீட் நம்பரில் இருப்பவர்கள் என போலீசார் அடையாளம் கண்டுபிடித்து விசாரித்தது எப்படியாக நடந்திருக்கும்? யாரோ மிக துல்லியமாக போலீசில் போட்டுக் கொடுக்காமல் இது சாத்தியமே இல்லை என்கின்றனர் நெல்லை பாஜகவினர்.
திருநெல்வேலியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மிக எளிதாக வெல்லும் வாய்ப்புள்ளது என்பது அக்கட்சியினர் நம்பிக்கை. அதேநேரத்தில் திமுக, காங்கிரஸின் அதீத செல்வாக்கு பாஜகவுக்கு ஏமாற்றத்தைத் தரும் என்கின்றனர் அந்த இரு கட்சிகள். ஒருவேளை நயினார் நாகேந்திரன் வென்றால் மத்திய அமைச்சராகவும் வாய்ப்பிருக்கிறது. இதனால்தானோ என்னவோ, பாஜகவிலேயே சில கறுப்பு ஆடுகளே ரூ4 கோடி தகவலை போலீசாருக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் கன கச்சிதமாக பாஸ் செய்திருப்பார்களோ? என சந்தேகிக்கின்றனர் நெல்லை பாஜகவினர். மேலும் இந்த விவகாரத்தை அண்ணன் நயினார் நாகேந்திரன் சும்மா விட்டுவிடவும் மாட்டார்.. காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடுகளுக்கு எதிராக நிச்சயம் காட்டமான நடவடிக்கையை மேற்கொள்வார் என நம்புகின்றனர் நெல்லை பாஜகவினர்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications